தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும் உயர்த்திட உறுதியேற்போம்: முதல்வர்

இந்திய நாட்டை வல்லரசு நாடாகவும், தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும் உயர்த்திட உறுதியேற்போம் என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Last Updated : Aug 15, 2019, 09:31 AM IST
தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும் உயர்த்திட உறுதியேற்போம்: முதல்வர் title=

சென்னை: நாட்டின் 73-வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர தின உரையாற்றி வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்பொழுது அனைவரும் இணைந்து தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவோம் என தெரிவித்தார்.

தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க உறுதியேற்போம் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். நாட்டின் 73-ஆவது சுதந்திர தின விழாவை ஒட்டி, முதல்வர் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது, 

இந்தியத் திருநாடு ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகள். சுதந்திரப் போராட்டத்தில் வீரர்கள் பலர் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்தனர். அந்த வீரத் தியாகிகளின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் சுதந்திர தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

சுதந்திரப் போராட்டத்தில் தியாகம் செய்த தியாகிகளைப் போற்றி பெருமைப்படுத்தும் வகையில், தியாகிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியன உயர்த்தி வழங்கப்பட்டது. மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களுக்கு மணிமண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. சுதந்திர தினமான இந்த இனிய நாளில் தமிழக மக்கள் அனைவரும் ஜாதி, மத, பேதங்களை களைந்து சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் உழைத்து இந்திய நாட்டை வல்லரசு நாடாகவும், தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும் உயர்த்திட உறுதியேற்போம் என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Trending News