Tamil Nadu Weather Update Today : இந்த வருடத்தின் ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் விடாது பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்திருக்கிறது.
கோடை வெயிலுக்கு பின் குளுகுளு மழை:
இதுவரை இல்லாத அளவிற்கு, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மக்களை கோடை வெயில் சுட்டெரித்தது. பல்வேறு பகுதிகளில் இயல்பை விட அதிகமாக வெப்பம் தகதகத்ததால் மக்கள் எப்போது மழை வரும் என காத்துக்கொண்டிருந்தனர். கோடையில் அவ்வப்போது மழை பெய்திருந்தாலும், அது மக்களின் வெப்ப தாகத்தை தணிக்கும் அளவிற்கு இல்லை. இந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியது முதல் மக்களை அடை மழை குளிர்வித்து வருகிறது.
கனமழை:
தமிழகத்தின் முக்கிய நகரான சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இரு தினங்களுக்கு முன்பு, இரவில் அடை மழை வெளுத்து வாங்கியது. கண்களை பிளக்கும் மின்னலுடன் விடிய விடிய பெய்த கனமழையால் சாலையில் ஆங்காங்கே வெல்லம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக அடையாறு, மைலாபூர், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெள்ள நீர் போல காட்சியளித்தன. பகலில் மிதமாக பெய்யும் கனமழை, இரவில் கொட்டித்தீர்த்து வருகிறது.
இன்றைய வானிலை நிலவரம்:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் ஓரிரி இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை பழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுள்ளது.
சென்னையை பொறுத்த வரை, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரின் ஒருசில பகுதிகளில் மாலையிலோ அல்லது இரவு நேரத்திலோ இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வரும் நாட்களிலும் மழை..
வரும் (ஜூன்) 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், 24 மற்றும் 25ஆம் தேடிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்: மஞ்சள் எச்சரிக்கை
எங்கெல்லாம் மழை?
கோவை மற்றும் நீலகிரியின் மலைப்பகுதிகளின் ஓரிரு இடங்களில், 22ஆம் தேதி கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல, தேனி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வரும் 23ஆம் தேதி, கோவி, நீலிகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளின் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், திண்டுக்கல், தேனி, தருமபுரி, சேலம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
வரும் 21 முதல் 23ஆம் தேதி வரை, தமிழக கடலோர பகுதிகளிலும், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளிலும் அதிகபட்சமாக 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதனால், இப்பகுதிகளுக்கு மீனார்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுருத்தப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க | Chennai Rains : சென்னையில் வெளுத்துக்கட்டும் மழை! எப்போது வரை நீடிக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ