அண்ணாமலை பொய்தான் பேசுவார்-அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி!

அண்ணாமலை பொய்தான் பேசுவார். எந்த காலத்திலும் திராவிட ஆட்சி தான் நடைபெறும். -அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி  

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Jun 5, 2024, 07:06 PM IST
  • அண்ணாமலை குறித்து பேசிய ராஜ கண்ணப்பன்
  • பொய் கூறுவார் என கருத்து!
  • ஸ்டாலின் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என புகழாரம்
அண்ணாமலை பொய்தான் பேசுவார்-அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி! title=

நாடு முழுவதும் 2 மாதங்களாக பரபரப்பாக சூடு பிடித்த தேர்தல் களம், தற்போது ஓரளவிற்கு ஓய்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 12 தொகுதிகளில் நின்ற பாஜக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 40 தொகுதிகளிலும் திமுக கட்சிதான் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியுள்ள தகவல்கள் வைரலாகி வருகிறது. 

தளபதியாரின் மூன்றாண்டு கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம். வாயை திறந்தால் அண்ணாமலை பொய்தான் பேசுவார். எந்த காலத்திலும் திராவிட ஆட்சி தான் நடைபெறும். -அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

மேலும் படிக்க | வெற்றிகரமான தோல்வி... சக்ஸஸ் ஆன தமிழக பாஜகவின் வியூகம் - அண்ணாமலையின் திட்டம் இதுதான்!

தளபதியாரின் மூன்றாண்டு கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம். தமிழக முதல்வர் மூன்றாண்டு கால கொடுத்த ஆட்சிக்கு கிடைத்த வெற்றி இது.

நாம் தமிழர் கட்சி 39 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது குறித்த கேள்விக்கு: அந்தக் கட்சியின் அமைப்பு அப்படி இருக்கு அதை கட்சியாக நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்று பதிலளித்தார். 

பாஜக வளர்ந்துள்ளதா என்ற கேள்விக்கு: வாயை திறந்தால் அண்ணாமலை பொய்தான் பேசுவார். எந்த காலத்திலும் திராவிட ஆட்சி தான் நடைபெறும் என்று கூறினார். 

மேலும் படிக்க | Tamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News