“ஆட்டை வெட்டுவது போல வெட்டிவிடுவோம்..” பாஜக மாநில பொது செயலாளருக்கு கொலை மிரட்டல்!

ஆட்டை வெட்டுவது போல தன்னையும் வெட்ட உள்ளதாக முகநூலில் கொலை மிரட்டல் விடுகின்றனர் - கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் புகார்.  

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Jun 13, 2024, 03:02 PM IST
  • பாஜக மாநில துணை செயலாளர் புகார்
  • முகநூலில் கொலை மிரட்டல்
  • ஆட்டை வெட்டுவது போல வெட்டுவதாக..
“ஆட்டை வெட்டுவது போல வெட்டிவிடுவோம்..” பாஜக மாநில பொது செயலாளருக்கு கொலை மிரட்டல்! title=

பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தேர்தல் முடிந்த பிறகு சட்டம் ஒழுங்கு சீர்குளைந்துள்ளதாகவும், அண்ணாமலையை கொச்சை படுத்தி பேசுவது மட்டுமல்லாமல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்டில் அண்ணாமலை புகைப்படத்தை மாட்டி நடு ரோட்டில் வைத்து வெட்டியுள்ளார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | சென்னையில் ரவுடியின் தம்பி வெட்டிக்கொலை! அடுத்தடுத்து பழிவாங்கப்படும் ரவுடிகள்! முழு விவரம்!

மேலும், இது பெரிய அச்சுறுத்தலை கொடுத்துள்ளதாக கூறிய் அவர் அங்கு பாஜகவினர் புகார் அளித்தும் இந்த செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “எனது முகநூல் பக்கத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கண்ட துன்டமாக வெட்டுவோம் என தெரிவித்துள்ளனர்.இவர்கள் யார் என்பதை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்” என தெரிவித்தார்.

தொடர்ந்து ஆட்டை போல தன்னை வெட்டுவதாக தெரிவித்து வருகின்றனர். காவல்துறைக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பு இல்லை.இந்த சம்பவங்கள் அனைத்தும் கீழ்த்தரமான அரசியலாக உள்ளது.சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது.ஆட்டை வெட்டுவது வேறு, ஆட்டில் அண்ணாமலையை புகைப்படத்தை மாட்டி வெட்டுவது வேறு,நேரடியாக அரசியல் களத்தில் மோதுவதற்கு துப்பு இல்லை.அன்றேக்கே இதை தடுக்கபட்டிருந்தால் இப்படி தொடர்ந்து கொலை மிரட்டல் வந்திருக்காது. இனி தமிழகத்தில் மிக பெரிய பிரச்சனையை சந்திக்க போகிறார்கள்.அந்த கட்சியில் உள்ள தலைவர்கள் தடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும் கூறினார். 

மேலும் படிக்க | Coconut Oil: ரேஷன் கடைகள் மூலம் தமிழகம் முழுவதும் தேங்காயெண்ணெய் விநியோகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News