பாகுபலி யானையை அடக்க வந்த விஜய் யானை! வைரல் வீடியோ!

மேட்டுப்பாளையத்தில் வாயில் காயமடைந்த பாகுபலி காட்டுயானையை பிடித்து சிகிச்சை அளிக்க வசீம், விஜய் என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது.  

Written by - RK Spark | Last Updated : Jun 24, 2023, 08:49 AM IST
  • வாயில் காயம்பட்ட காட்டு யானை.
  • சிகிச்சை அளிக்க வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
  • மோப்ப நாய்களை வரவழைத்துள்ளனர்.
பாகுபலி யானையை அடக்க வந்த விஜய் யானை! வைரல் வீடியோ! title=

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியினை ஒட்டிய மலை அடிவாரபகுதியில் கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் பாகுபலி என அழைக்கப்படும் ஆண் காட்டுயானை ஒன்று சுற்றி வந்தது. தாசம்பாளையம், சமயபுரம், ஓடந்துரை உள்ளிட்ட பகுதிகளில் தனது வலசை பாதையை ஏற்படுத்தி கொண்டு தினமும் அந்த வழியாகவே பயணித்து வந்தது.  ஊருக்குள் உலாவி வந்தாலும் இதுவரை அந்த யானை யாரையும் தாக்கிய தில்லை. இந்த நிலையில் அந்த யானைக்கு நேற்று திடீரென வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து கல்லார் பகுதிக்கு சென்ற காயம் பட்ட யானையை வனத்துறையினர் தேடி வந்த நிலையில் கடைசி வரை தேடியும் தென்படவில்லை.

மேலும் படிக்க | அரசியலை சினிமா சூட்டிங்போல நினைத்துக்கொள்கிறார்கள் - விஜய் குறித்த கேள்விக்கு வானதி சீனிவாசன் கருத்து

இந்த வனப்பகுதியில்  ஏற்கனவே நாட்டுவெடி வைத்து வன உயிரினங்கள் வேட்டையாடபட்ட சம்பவம் நடந்துள்ளதால் யானைக்கு யாரேனும் நாட்டு வெடி வைத்திருக்கலாம் என வன ஆர்வலர்கள் சந்தேகம்  எழுப்பினர்.  இதனையடுத்து மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காட்டுயானை பாகுபலி எங்கு உள்ளது மற்றும் வனத்தில் நாட்டு வெடிகள் ஏதேனும் உள்ளதா என கண்டுபிடிக்க வனத்துறையினர் மோப்ப நாய்களை வரவழைத்தனர். கோவை சாடிவயல் முகாமில் இருந்து பயிற்சி பெற்ற பைரவா, வளவா ஆகிய இரு மோப்ப நாய்கள் மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டது.  இந்த நிலையில் இரண்டாம் நாளாக மோப்ப நாய் உதவியுடன் கல்லார் அருகே உள்ள மாம்பட்டி மற்றும் ஆற்றின் கரையோர வனப்பகுதியில் வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து  தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

elephant

இந்நிலையில் பாகுபலி யானையை கண்டவுடன் அதற்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர், இதையடுத்து பாகுபலி யானையை பிடிப்பதற்கு முதுமலை யானைகள் முகாமில் இருந்து வசீம், விஜய் என்ற இரண்டு கும்கி யானைகள் மேட்டுப்பாளையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. பாகுபலி யானைக்கு வாயில் ஏற்பட்டுள்ள காயம் சிறியதாக இருந்தால் பழங்களில் மருந்து மாத்திரைகளை வைத்து கொடுத்து அதற்கு சிகிச்சை அளிப்பது என்றும், பெரிய காயமாக இருந்தால் டாப்ஸ்லிப் யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று அங்கு வைத்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். பாகுபலி யானையை பிடித்து சிகிச்சை அளிப்பதற்காக கோட்ட உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார் தலைமையில் வனச்சரகர்கள், வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

மேலும் படிக்க | கலைஞர் பேனா நினைவுச்சின்னத்திற்கு அனுமதி... மத்திய அரசின் முக்கிய நிபந்தனைகள் என்னென்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News