தமிழக பட்ஜெட் 2022-2023-ஐ நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யவிருக்கும் நிலையில், அவர் கடந்த ஆண்டு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் இதோ..
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தவுடன் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் என்பதுடன், தமிழகத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் காகிதமில்லா பட்ஜெட்டாக 2021-22 பட்ஜெட் இருந்தது.
2021-22 நிதியாண்டின் மொத்த வருவாய் ரூ.2,60,409.26 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டது. ஒட்டுமொத்த வருவாய் செலவினம் ரூ.2,61,188.57 என்றும், வருவாய் பற்றாக்குறை ரூ.58,692.58 கோடி என்று சொன்ன பட்ஜெட்.
இந்த நிதியாண்டின் 6 மாதங்களுக்கு மட்டுமே, திமுகவின் இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட் போடப்பட்டது.
தமிழக பட்ஜெட்டை நேரலையில் பார்க்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவதாக சொன்ன பட்ஜெட் நடப்பு ஆண்டின் பட்ஜெட்.
தேர்தல் வாக்குறுதியின்படி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்பட்டது.
நடப்பு ஆண்டின் பட்ஜெட்டில் தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழக காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி ஒதுக்கீடு
தீயணைப்புத்துறைக்கு ரூ.405.13 கோடி நிதி ஒதுக்கீடு
சாலை பாதுகாப்பு திட்டத்திற்காக மொத்தம் ரூ.500கோடி நிதி
நீதித்துறைக்கு ரூ.1,713.30 கோடி நிதி ஒதுக்கீடு
உணவு மானியத்துக்கு ரூ.8,437.57 கோடி நிதி ஒதுக்கீடு
நீர் பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி நிதி ஒதுக்கீடு
மேலும் படிக்க | இன்று முதல் 12-14 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி
மீன்வளத்துறைக்கு ரூ.1,149.79 கோடி நிதி ஒதுக்கீடு
2021-22 ஆம் ஆண்டில் ரூ.8,017.41 கோடி செலவில் 2,89,877 வீடுகள் கட்டுவதாக உறுதியளித்தது தமிழக அரசு தாக்கல் செய்த கடந்த பட்ஜெட்.
நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கீடு
கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.
சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2,230 கோடி
அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கீடு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.2,350 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு 3,954.44 கோடி நிதி ஒதுக்கீடு
நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899.17 கோடி நிதி ஒதுக்கீடு
மகளிர் இலவச பயணத்திற்கு மானியமாக நிதி ஒதுக்கீடு ரூ.703 கோடி நிதி ஒதுக்கீடு
பள்ளி கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதற்காக ரூ.32,599.54 கோடிநிதி ஒதுக்கீடு
உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி ஒதுக்கீடு.
மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறைக்கு மொத்தம் ரூ.18,933.20 கோடி நிதி ஒதுக்கீடு
மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் எதிர்ப்பார்ப்புகள் என்ன? மின்கட்டணம் உயர்த்தப்படுமா?
அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியத்திற்கு மானியம் வழங்க ரூ.215.64 கோடி நிதி ஒதுக்கீடு.
சுற்றுலாத்துறைக்கு ரூ.187.59 கோடிநிதி ஒதுக்கீடு.
மகளிர் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்க ரூ.762.23 கோடி.
3ம் பாலினத்தவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.1.50 கோடி ஒதுக்கீடு
மேலும் படிக்க | ‘டெபாசிட்’ பணத்தைக் கேட்ட தமிழக அரசு... வட்டியுடன் கொடுத்த நீதிமன்றம்.!
அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்த ரூ.48.48 கோடி ஒதுக்கீடு.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மதிய உணவுத்திட்டத்திற்கு ரூ.1,725.41 கோடி ஒதுக்கீடு.
ஆதி திராவிடர், பழங்குடியினர் நலனுக்காக ரூ.4,142.33 கோடி ஒதுக்கீடு.
மசூதிகள் மற்றும் தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்காக ரூ.225.62 கோடி ஒதுக்கீடு.
இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 திட்டம்
2022-23 பட்ஜெட்டில் மின்கட்டணம் உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா நெருக்கடி காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. எனவே, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்பதற்காக அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறலாம்.
மேலும் படிக்க | நகைக்கடன் தள்ளுபடியில் அரசின் நிலைப்பாடு என்ன?- தினகரன் கேள்வி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR