நான் இறக்க போகிறேன்... என் இறுதி விருப்பம் நிறைவேற உதவிடுங்கள் சத்குரு!

கேரளப் பெண்ணின் உருக்கமான கோரிக்கைக்கு, சத்குருவின் நெகிழ வைக்கும் பதில்!!!

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 19, 2023, 07:05 PM IST
  • பெண்ணின் உருக்கமான கோரிக்கைக்கு சத்குரு அவர்கள் பதில் அளித்துள்ளார்.
  • சமூக வலைத்தளங்களில் பலரின் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
  • காயத்ரி என்ற பெண்மணி தன் இறுதி விருப்பம் குறித்த பதிவொன்றை டீவீட்டரில் பதிவிட்டு இருந்தார்.
நான் இறக்க போகிறேன்... என் இறுதி விருப்பம் நிறைவேற உதவிடுங்கள் சத்குரு! title=

நவீன அறிவியலின் படி நான் இறக்க சில மாதங்கள் மட்டுமே இருக்கிறது, இறப்பதற்கு முன்பு என் இறுதி விருப்பத்தை நிறைவேற்ற யாராவது உதவி செய்யுங்கள் என்ற கோரிக்கையை ட்வீட்டரில் பதிவிட்ட கேரளாவை சேர்ந்த பெண்ணிற்கு சத்குரு நெகிழ வைக்கும் பதிலை அளித்துள்ளார். சமூக வலைதளங்கள் வெறும் கேளிக்கைகளுக்கானது என்பதைத் தாண்டி சில நேரங்களில் நம் நெஞ்சை தொட்டுவிடும் சம்பவங்களையும் நடத்திவிடுகிறது. அந்த வகையில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ட்வீட்டர் மூலம் நடந்தேறி இருக்கிறது. 

காயத்ரி என்ற பெண்மணி தன் இறுதி விருப்பம் குறித்த பதிவொன்றை டீவீட்டரில் பதிவிட்டு இருந்தார். அதில் அவர் "சத்குரு அவர்களை சந்திப்பது என்பது என் வாழ்நாள் விருப்பமாக இருந்து வருகிறது. நான் வாழ்வதற்கு இன்னமும் சில மாதங்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறது என நவீன அறிவியல் சொல்கிறது. யாரேனும் நான் என் குருவை சந்திக்க உதவ முடியுமா? நான் யாருமில்லை தான், இருந்தாலும் என் இறுதி விருப்பத்தை நான் உணர தயவுசெய்து உதவி செய்யுங்கள்." என்று பதிவிட்டுள்ளார்.

அந்த பெண்ணின் உருக்கமான கோரிக்கைக்கு சத்குரு அவர்கள் பதில் அளித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் " வணக்கம் காயத்ரி. நான் தற்போது பாரதத்திற்கு வெளியே பயணத்தில் இருக்கிறேன். உணர்வளவில் நான் உங்களுடன் இருக்கிறேன். திரும்பும்போது உங்களை சந்திப்பதை எதிர்நோக்கி இருக்கிறேன். மிகுந்த அன்பும் ஆசியும் " என்று அவர் பதிவிட்டுள்ளார். 

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பலரின் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது. சத்குரு அவர்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மக்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார். அவர் நிறுவிய ஈஷா யோகா மையம் மூலம் நடந்தப்படும் யோக வகுப்புகள் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | “ஈஷாவின் உதவி இல்லாமல் நாங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை”: சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்!

மேலும் படிக்க | அக்ஷய திருதியையில் உருவாகும் 7 யோகங்கள்! 3 மடங்கு பலன் கொடுக்கும் பரிகாரங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News