திமுக தலைவர் கருணாநிதியை நானும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் நேரில் சென்று பார்த்தோம் என முதலவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில மாதங்களாக மருத்துவ கண்கானிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ரத்த அழுத்தம் காரணமாக காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரபரப்பட்டு வந்தது. இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவிரி மருத்துவமனை நாள் தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
கருணாதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய சென்னை காவேரி மருத்துவமனைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் வந்துள்ளனர். இவர்களுடன் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டோரும் வருகைதந்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பழனிசாமி பேசுகையில்...!
திமுக தலைவர் கருணாநிதியை நானும், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் நேரில் சென்று பார்த்தோம். மரியாதை கூரிய முன்னாள் முதலவர் கலைஞரை நேரடியாக பார்த்தோம். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவரின் உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர் குழு கண்காணித்து வருகிறது என தெரிவித்தார்.
I have just met him in Kauvery hospital, he is better and is recovering well: Chief Minister of Tamil Nadu Edappadi K. Palaniswami after meeting M #Karunanidhi pic.twitter.com/Vxln0zEfc4
— ANI (@ANI) July 30, 2018
கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து குறிப்பிடத்தக்கது.