நடிகா் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெயரை இந்திய தே்ாதல் ஆணையம் பதிவு செய்தது!
கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் நாள் ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அவர்களின் இல்லத்தில் வைத்து மக்கள் நீதி மய்யம் என்ற தனது புதிய கட்சியின் பயணத்தை நடிகர் கமல்ஹாசன் தொடங்கினார்.
இந்நிகழ்வை அடுத்து மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் தனது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்தார்.
இதனையடுத்து தனது மக்கள் நீதி மய்யம் கட்சி-யின் பெயரை முறைப்படி பதிவு செய்ய, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். பின்னர் கட்சியினை பதிவு செய்வதில் யாருக்கும் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், யாரும் ஆட்சேபம் தெரிவிக்காததை அடுத்து கமல்ஹாசனை தேர்தல் ஆணையம் அழைத்தது. இதன் காரணமாக கடந்த ஜூன் 20-ஆம் நாள் டெல்லி சென்ற அவர் இதுகுறித்த சந்திப்பில் பங்கேற்றார்.
இந்நிலையில் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.