கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அவரது உயிரிழப்பில் தாய் சந்தேகப்பட நேற்று மாணவர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென அந்தப் போராட்டம் கலவரமாக மாறியது. அந்த சமயத்தில் பள்ளிக்குள் சென்ற சிலர் பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்தனர். மேலும் மேஜை, நாற்காலி உள்ளிட்டவைகளையும் தூக்கி சென்றனர். இதனையடுத்து காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதற்கிடையே பள்ளியின் செயலாளர் வெளியிட்டிருந்த வீடியோவில், “மாணவியின் உயிரழப்புக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துவருகிறோம். இந்தக் கலவரத்துக்கு மாணவியின் தாய்தான் முழு காரணம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
நிலைமை இப்படி இந்தக் கலவரத்தை சிலர் திட்டமிட்டே தூண்டிவிட்டிருக்கின்றனர் என தகவல் பரவியது. இச்சூழலில் தனியார் பள்ளியில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் நேற்று தெரிவித்திருந்தார்.
ஆனால்,தனியார் பள்ளிகள் தாங்களாகவே விடுமுறை விட்டுக்கொண்டால் சம்பந்தபட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று தமிழக அரசு எச்சரித்திருந்தது.
மேலும் படிக்க | உதயநிதி ஸ்டாலின் vs ரஜினிகாந்த் | சண்டை போட்டுக் கொள்ளும் ரசிகர்கள்
இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் 91 சதவீதம் பள்ளிகள் இன்று இயங்கின. மொத்தம் 987 பள்ளிகள் இன்று செயல்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அப்போது அவருடன் தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் சமரசம் எடப்பட்டதை அடுத்து வழக்கம்போல் நாளை முதல் தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் செயல்படுமென்று கூறி போராட்டத்தை வாபஸ் பெறுவதாக நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: இதுவரை 329 பேர் கைது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ