கனியாமூர் பள்ளி கலவரம்: முக்கிய 4 குற்றவாளிகள் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

Kallakurichi Incident: கனியாமூர் பள்ளி கலவரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட மேலும் நான்கு பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 16, 2022, 01:30 PM IST
  • கனியாமூர் பள்ளி கலவரம்.
  • நான்கு பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
  • கலெக்டர் ஷ்ரவன்குமார், இந்த நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
கனியாமூர் பள்ளி கலவரம்: முக்கிய 4 குற்றவாளிகள் மீது பாய்ந்தது 'குண்டாஸ்' title=

கனியாமூர் பள்ளி கலவரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட மேலும் நான்கு பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர்  சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13 ஆம் தேதி பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் கலவரக்காரர்களால் பள்ளியிலிருந்த மாணவர்களின் சான்றிதழ் பள்ளி பேருந்து ஆகியவற்றை சேதம் செய்தனர். போலீஸ் பேருந்து உள்ளிட்டவை தாக்கப்பட்டதோடு, சில வாகனங்கள் முற்றிலுமாக தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. 

இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார் இதுவரை 26 சிறார்கள் உட்பட 399 பேரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டவர்களை தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

kallakurichi incident

சின்னசேலம் அருகே பெரியசிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சர்புதீன், உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் , வி.மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சாதிபதி , தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த மணி ஆகிய நால்வர் மீதும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ் எறித்தது, பள்ளி மற்ற போலீஸ் பேருந்துகளுக்கு தீயிட்டு கொளுத்தியது, போலீசார் மீது கற்களை வீசி தாக்கியது உள்ளிட்ட முக்கிய குற்ற சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் படிக்க | ஒரு மாத குழந்தைக்கு மது; போதையில் பெண் கொடூரம்... கடத்தப்பட்ட குழந்தையா என சந்தேகம்

இவர்கள் நான்கு பேரையும் எஸ்.பி பகலவன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சி சரவணகுமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட 8 பேர் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு பேரும் வெளியே வந்தால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால், இவர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., பகலவன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை அடுத்து, கலெக்டர் ஷ்ரவன்குமார், இந்த நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் படிக்க | சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கிய மதுரை உயர் நீதிமன்றக் கிளை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News