நிரம்பி வழியும் கபினி அணை! தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பு!

மைசூருவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக கபினி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jun 14, 2018, 10:36 AM IST
நிரம்பி வழியும் கபினி அணை! தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பு! title=

மைசூருவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக கபினி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர் விவரகாரத்தில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் 1892- ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை தீர்வு காணமல் வருகிறது. 

சமீபத்தில் உச்சநீதிமன்றம் காவிரி நீர் எந்த ஒரு மாநிலத்துக்கும் சொந்தமில்லை என்றும் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டதுடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரிக்கை தமிழகத்தில் எழுந்தது. பல்வேறு போராட்டம் நடத்தப்பட்டும் கர்நாடகா காவிரி நீரை திறந்துவிடாமல் பிடிவாதமாக இருந்து வந்தது

இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கர்நாடகத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் கபினி உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.

இதையடுத்து கபினி அணையில் இருந்து தண்ணீர் உடைத்து கொண்டு வெளியேறினால் கர்நாடக அரசு நீரை திறந்துவிட்டது. இதனால் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேலும் கபினி அணையில் இருந்து காவிரி நீர் 2 நாட்களில் தமிழகம் வந்தடையும். 

 

 

 

 

 

Trending News