ஸ்டான்லி மருத்துவமனையில் 8-வது படித்தவர்களுக்கு வேலை!

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பணியிடம் காலியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Aug 1, 2018, 06:58 PM IST
ஸ்டான்லி மருத்துவமனையில் 8-வது படித்தவர்களுக்கு வேலை! title=

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பணியிடம் காலியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள 13 ஆய்வக சேவகர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நிரப்புவது தொடர்பாக 07.08.2018-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • காலியாக இருக்கும் பதவிக்கு 8-வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம் ஆகும். நல்ல உடல் திறன் பெற்றிருக்கு வேண்டும். 
  • 01.08.2018 அன்று பொதுப் பிரிவில் பிற்படுத்தப்பட்டவர் / மிகவும் பிற்படுத்தப்பட்டவர் 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
  • 01.08.2018 அன்று ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப படிவங்களை.,

முதல்வர், 
அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி,
சென்னை - 1 

என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் எனவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேற்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.அன்புச்செல்வன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Trending News