கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
இதுதொடர்பாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் அரசை வலியுறுத்தி வந்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், விசாரணை கமிஷன் தொடர்பான அரசாணையை நேற்றிரவு தமிழக அரசு வெளியிட்டது. அரசாணையில் கூறியிருப்பதாவது:-
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவு தொடர்பான விசாரணை கமிஷன் அமைத்தது பற்றிய அரசாணை வெளியீடு. pic.twitter.com/8GoKu7IrfJ
— O Panneerselvam (@OfficeOfOPS) September 27, 2017