சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு (Citizenship Amendment Act) எதிராக மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சி (Makkal Needhi Maiam) தலைவர் கமல்ஹாசன் (Kamal Haasan) கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, அதிகாரம் மக்களின் கையில் இருக்கும் வரையில் தான் அது ஜனநாயகம். மக்களுக்கு எதிராக செல்லும் இந்த தனிநாயகத்தை ஒழிக்கும் வரையில் நான் ஓய மாட்டேன். நாம் யாருமே ஓயக்கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளதாக கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டு உள்ளது.
அதிகாரம் மக்களின் கையில் இருக்கும் வரையில் தான் அது ஜனநாயகம் . மக்களுக்கு எதிராக செல்லும் இந்த தனிநாயகத்தை ஒழிக்கும் வரையில் நான் ஓய மாட்டேன் . நாம் யாருமே ஓயக்கூடாது-@ikamalhaasan #Nammavar #MakkalNeedhiMaiam
Check out Full video on Instagram
.
.https://t.co/cSpWIjZsMb pic.twitter.com/VZW8N3lwm8— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 22, 2019
குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு (Citizenship Amendment Act) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்த வரை திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் நாளை சென்னையில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி ஒன்றை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்காக பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் ஒன்றாகும். ஆனால் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்த பின்னரே, திமுக பேரணியில் கலந்துக்கொள்வது குறித்து பதில் அளிப்பதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தி.மு.க-வின் பேரணியில் மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டது. அக்கட்சி சார்பில் கடிதம் ஒன்று திமுகவுக்கு அனுப்பப்பட்டது. அதில், தலைவர் கமல் அவர்களுக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்காக மருத்துவ பரிசோதனை செய்ய வெளிநாடு சென்றுள்ளார். எனவே கட்சியின் தலைவர் இல்லாமல் பேரணியில் கட்சி பங்கேற்க இயலாது. ஆனால், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான தி.மு.க-வின் போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஏற்கனவே கடந்த 18 ஆம் தேதி குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு (Citizenship Amendment Act) எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சென்னை பல்கலைக் கழக மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின்பு செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன் (Kamal Haasan )கூறியது, "மாணவர்களின் பாதுகாவலனாக அவர்களின் குரலாக நான் இங்கு வந்துள்ளேன். மாணவர்களுடன் பேசினேன். போராடும் மாணவர்களுக்கு உணவு கொடுக்காமல் கல்லூரி உணவகங்களை பூட்டியது இந்த அரசிற்கு அவமானம். மாணவர்கள் போராட்டம் பற்றி அரசுக்கு எந்தவித கவலையும் இல்லை. படிக்கும் இடத்திலேயே மாணவர்களை அகதியாக்கப்பட்டு உள்ளனர். இன்றைய செய்தி நாளைய சரித்திரம். மாணவர்களின் போராட்டத்துக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். மாணவர்களின் போரட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளிக்கும். குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கூறியிருந்தார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.