உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!

விருதுநகரில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ராதாகிருஷ்ணன் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 26, 2021, 10:56 AM IST
உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!! title=

விருதுநகரில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ராதாகிருஷ்ணன் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு வயது 48. இவரது குடும்பத்தில் பல வித பிரச்சனைகள் இருந்து வந்ததாகவும், அதனால் இவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இவரது மனைவி பானுமதி சிவகாசி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் ராதாகிருஷ்ணன் பணிக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். வீட்டிலிருந்து கிளம்பிய அவர், விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே ரயில் முன் பாய்ந்து  தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுதொடர்பாக தூத்துக்குடி ரயில்வே இருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறப்பு காவல் ஆய்வாளர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனை இல்லாத மனிதன் உலகில் யாரும் இல்லை. நம்மை மீறி நமக்கு வரும் கஷ்டங்களைக் கண்டு துவண்டுவிடாமல், அவற்றில் இருந்து மீள வழி காண்பதே நமக்கும் நம்மை சார்ந்து இருப்பவர்களுக்கும் நல்லதாகும். தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது.

ALSO READ | சுனாமி: ஆறாத வடு... தீராத வலி.. ஆழிப்பேரலையின் 17-ம் ஆண்டு நினைவு நாள் 

ALSO READ | விழுப்புரம்: சிறுவன் இறந்த சம்பவத்தில் புதிய CCTV காட்சி வெளியீடு! சிக்கப்போகும் அந்த இருவர் யார்? 

ALSO READ | கள்ளக்காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News