Sachin Siva Allegation: இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனும் மதுரையைச் சேர்ந்தவருமான சச்சின் சிவா, சென்னையில் இருந்து மதுரைக்கு வருவதற்காக நேற்று (ஏப். 18) இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் SETC-க்கு சொந்தமான TN01 AN3213 என்ற பதிவெண் கொண்ட கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்தில் பயணிப்பதற்காக ஏறியுள்ளார்.
அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை என கூறி பேருந்தில் ஏறக்கூடாது என கூறியுள்ளார். அப்போது சச்சின் சிவா, இதுபோன்ற பேருந்துகளில் பயணிக்க அனுமதி உள்ளது என பதிலளத்துள்ளார். அதற்கு, நடத்துநர் சிவாவிடம் 'முகத்தை உடைத்துவிடுவேன். எனக்கு எல்லாம் தெரியும்' என கூறி மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 'மீனவர்களுக்காக என் வீட்டுக்கதவு எப்போதும் திறந்திருக்கும்' - ஆளுநர் ஆர்.என்.ரவி
மேலும் இதுகுறித்து கேட்டபோது, 'அப்படித்தான் பேசுவேன் உன்னை வண்டியில் ஏற்ற முடியாது' எனக்கூறி வண்டியில் ஏற்றுவதற்கு மறுத்துததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாற்றுத்திறனாளி சச்சின் சிவா கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் அதே பேருந்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்கு அந்த நடத்துனர், 'நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது" என அலட்சியமாக பேசி மாற்றுத்திறனாளிக்கு மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
வீடியோ:
அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மாற்றுத்திறனாளி சச்சின் சிவாவை பேருந்தில் ஏற்றாமல், அப்படியே விட்டுசென்றுள்ளார். மேலும் காவல்துறையினர் முன்பாகவே, 'நீ மதுரைக்கு வா. பார்த்துக்கொள்ளலாம்' என கூறி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துவிட்டு சென்றதாகவும் தெரிகிறது. இதனையடுத்து மற்றொரு பேருந்தில் மிகுந்த சிரமத்துடன் சச்சின் சிவா பயணித்துள்ளார்.
ஒரு இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கே இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் மற்ற மாற்று திறனாளிகள் பார்வையற்றோருக்கு என்ன மாதிரியான நிலை அரசு பேருந்தில் ஏற்படும் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மேலும் இதுபோன்ற மாற்றுத்திறனாளிக்கு மிரட்டல் விடுத்து பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சச்சின் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க | பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசு! அசத்தும் தலைமையாசிரியை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ