Ireland-லிருந்து வந்த alert, சென்னையில் பிடிபட்ட திருடன்: Hero-வான Technology!!

பாதுகாப்பு செயல்முறை மூலம் வீட்டிற்குள் ஒரு திருடன் நுழைந்திருப்பதைப் பற்றி தெரிந்து கொண்ட அனில், உடனடியாக போலீஸைத் தொடர்பு கொண்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2020, 08:35 PM IST
  • சென்னையில் உள்ள தனது வீட்டை அயர்லாந்தில் வசிக்கும் அனில் முருகன் உளவு கேமரா மூலம் கண்காணித்து வந்தார்.
  • பாதுகாப்பு செயல்முறை மூலம் வீட்டிற்குள் ஒரு திருடன் நுழைந்திருப்பதை அனில் அறிந்தார்.
  • சரியான நேரத்திற்கு சென்ற போலீசார் குற்றவாளியைப் பிடித்தனர்.
Ireland-லிருந்து வந்த alert, சென்னையில் பிடிபட்ட திருடன்: Hero-வான Technology!! title=

அயர்லாந்தில் வசிக்கும் ஒருவரின் தாய் பாசம் சென்னையில் நீண்ட நாட்களாக தேடப்பட்ட ஒரு குற்றவாளி பிடிபட வழிவகுத்தது. ஆம்!! கேட்பதற்கு விசித்திரமாக இருந்தாலும், இது உண்மையாக நடந்துள்ளது.

சென்னையில் உள்ள தனது வீட்டை அயர்லாந்தில் (Ireland) வசிக்கும் அனில் முருகன் உளவு கேமரா மூலம் கண்காணித்து வந்தார். தனது வயதான தாய் தனியாக சென்னை வீட்டில் இருப்பதால், அவர் நலமாக இருக்கிறாரா என்பதைப் பார்க்க, அவர் லைவ் கேமரா மூலம் தொடர்ந்து தன் விட்டை கண்காணித்து வந்தார்.

அவரது வீட்டில் இருந்த அவரது தாய், ஞாயிற்றுக்கிழமையன்று அண்ணா நகரில் உள்ள தன் மகள் வீட்டிற்கு சென்று விட்டார். செவ்வாயன்று காலை, சைகோ முரளி என்றழைக்கப்படும் குற்றவாளி, பூட்டிய வீட்டிற்குள் திருட்டுத்தனமாக நுழைந்தார்.

ஆனால், இப்படி பூட்டை உடைத்து ஒருவர் வீட்டிற்குள் வந்திருப்பதை வீட்டின் பாதுகாப்பு செயல்முறை நெதர்லாந்தில் உள்ள அனில் முருகனுக்கு தெரியப்படுத்தியதும் அவரை எச்சரித்ததும் அந்த குற்றவாளிக்குத் தெரியாது.

பாதுகாப்பு செயல்முறை மூலம் வீட்டிற்குள் ஒரு திருடன் நுழைந்திருப்பதைப் பற்றி தெரிந்து கொண்ட அனில், உடனடியாக போலீஸைத் (Police) தொடர்பு கொண்டார். விரைந்து தன் வீட்டிற்கு செல்லுமாறு அவர் தொலைபேசியிலேயே அதிகாரிகளை வேண்டிக்கொண்டார். இதையடுத்து, காவல்துறையின் குழு ஒன்று அருள் கொடுத்த விலாசத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு சென்ற போலீசார் வீட்டில் இருந்த குற்றவாளியைப் பிடித்தனர்.

ALSO READ:தொற்றின் தூதன் என தெரியாமல் mask-ஐ எடுத்துச் செல்லும் அப்பாவி பறவையின் Viral Photo!!

குற்றவாளி பிடிபட்டு விசாரணையின் போதுதான் அவன் ஏற்கனவே பல சொத்து மோசடி வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி என்பது தெரிய வந்தது.

"எங்கள் ரோந்து குழு, அந்த குற்றவாளி வீட்டை விட்டு வெளியே வரும்போது அவனைப் பிடித்தது. வீட்டில் ஒரு மடிக்கணினி மட்டுமே இருந்தது. ஆனால் போலீஸ் குழு சரியான நேரத்தில் அங்கு சென்றதால் குற்றவாளியால் அதை திருட முடியவில்லை” என்று ஒரு அதிகாரி கூறினார்.

"எங்கள் அதிகார வரம்பில் அவர் இரண்டு, மூன்று குற்றங்களில் ஈடுபட்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு குற்றம் தொடர்பாக திருமங்கலம் போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்” என்று அண்ணா நகர் துணை ஆணையர் ஜி ஜவஹர் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் (Technology) நமது தினசரி வாழ்க்கையில் பல விதங்களில் உதவி வருகின்றது. இப்படிப்பட்ட சம்பவங்களைப் பற்றி கேட்கும்போது, தொழில்நுட்பத்தின் பல்வேறு பயன்பாடுகள் குறித்தும், அவற்றால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் நாம் மேலும் அறிந்து கொள்கிறோம். 

ALSO READ: கையில் குழந்தை, மனதில் உறுதி: புலம் பெயர்ந்த பெண் தொழிலாளிதான் Corona காலத்து துர்கை அம்மன்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News