தங்கத்தை கட்டியாக கடத்துவது பழைய ஸ்டைல்.... ஷீட்களாக கடத்துவது புது ஸ்டைல்...!!!

அட்டைத் தாள்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  1.04 லட்சம் அமெரிக்க டாலர்  மதிப்பிலான தங்க தாள்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 22, 2020, 07:24 PM IST
  • சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் ஒரு பயணிக்கு தனிப்பட்ட முறையில் வந்த பொருட்களிலிருந்து 1.04 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 1.45 கிலோ தங்க ஷீட்களை பறிமுதல் செய்துள்ளது.
  • குறிப்பிட்ட பயணி முன்னதாக துபாயிலிருந்து வந்திருந்தாலும், அவரது உடமைகள் பின்னர் தனியாக அனுப்பப்பட்டிருந்தன.
  • இந்த பயணி தமிழ்நாட்டின் கள்ளக்குரிச்சியைச் சேர்ந்தவர்
தங்கத்தை கட்டியாக கடத்துவது பழைய ஸ்டைல்.... ஷீட்களாக கடத்துவது புது ஸ்டைல்...!!! title=

சென்னை(Chennai): குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில், ஒரு பயணிக்கு வந்த பார்சல் பரிசோதித்து பார்க்கப்பட்டதில்,  சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள், 1.04 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 1.45 கிலோ தங்க தாள்களை பறிமுதல் செய்துள்ளது. அந்த குறிப்பிட்ட பயணி முன்னதாகவே துபாயில் இருந்து சென்னை வந்திருந்தார். அவரது உடமைகள் தனியாக, துபாயிலிருந்து அனுப்பபட்டன.

இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo Airlines) விமானம் வழியாக அனுப்பபப்பட்ட நான்கு அட்டைப்பெட்டிகள், தனியாக அவருக்கு unaccompanied baggage ஆக அனுப்பப்பட்டிருந்தது.

அட்டைப்பெட்டியில் பொம்மைகளும் படுக்கை விரிப்புகளும் மற்ற ப்வேறு சில பொருட்களும் இருப்பதாக் கூறப்பட்டது. ஆனால், பெட்டிகள் வழக்கத்திற்கு  மாறாக கனமாக இருந்ததாக கூறப்பட்டது.

அட்டைத் தாளைக் கிழித்தபோது, ​​கார்பன் பேப்பரில் சுற்றப்பட்ட தங்க ஷூட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அட்டையின் இரண்டு அடுக்குகளுக்கு இடையில் மறைத்து தங்க ஷீட்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

"இது  போன்று தனியாக பயணிகளுக்கு வரும் சாமன்களில் இருந்து தங்கத் ஷீட்கள் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறையாகும், இது முன்னர் பயணிகளுடன் வரும் சாமான்களில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பார்த்தோம். ஆனால்  புதுமையான வழியில் கடத்தல் நடைபெற்றுள்ளது. தங்க ஷீட்கள் கார்பனால் சுற்றப்பட்டிருந்ததால், அதனை கண்டறிவது கடினம். குறிப்பிட்ட உளவுத் தகவல் காரணமாகத் தான் இதை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது”என்று சுங்க துறை ஆணையர் ராஜன் சவுத்ரி கூறினார்.

ALSO READ  | பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யத்தின் உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை

அட்டைப்பெட்டி பெட்டிகளில் இருந்து மொத்தம் 3 படுக்கை விரிப்புகள் மற்றும் 7 பொம்மை பெட்டிகள் இருந்தன. இவற்றில் ரூ .78.4 லட்சம் மதிப்புள்ள 1.45 கிலோ எடையுள்ள 10 தங்க ஷீட்கள் 1962 சுங்கச் சட்டத்தின் கீழ் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த பயணி தமிழ்நாட்டின் கள்ளக்குரிச்சியைச் சேர்ந்தவர், துபாயில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார். கோவிட் -19 பரவலைத் தொடர்ந்து வேலையை இழந்த பின்னர் அவர் சமீபத்தில் தாயகம் திரும்பினார். அவரை இப்போது அதிகாரிகள் கைது செய்தனர்.

ALSO READ | கொரோனா நிலவரம்: இன்று இறப்பு எண்ணிக்கை குறைந்தது; தமிழகத்தில் 5,980 பேருக்கு பாதிப்பு

Trending News