தமிழ்நாட்டில் கடந்த 2021 ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடந்தது. மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றன. அ.தி.மு.க. - பா.ஜ கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. தி.மு.க., தலைவர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் முதலமைச்சர் பொறுப்பேற்று சுமார் 1 அரை வருடங்களாகி விட்டது. தி.மு.க., அரசிற்கு பல்வேறு வகையில் பாராட்டும், பல்வேறு வகையில் கடுமையான விமர்மசனும் என கலவையான மக்கள் கருத்து எழுந்துவருகிறது வருகிறது.
மேலும் படிக்க | ரஜினிகாந்த் - ஷங்கர் இடையே ஏற்படப்போகும் மிகப்பெரிய மோதல்!
இந்நிலையில் மதுரையில் நடிகர் விஜயின் ரசிகர்கள் சிலர் 2026-ல் விஜய் தலைமையினா ஆச்சி அமைய உள்ளதாக பரபர அரசியல் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் 2021-ல் விடியல் ஆட்சியை பார்த்துவிட்டோம் மனமாக ! - 2026-ல் வாரிசு ஆட்சியை பார்க்கப்போகிறோம் தரமாக ! என்று எதுகை மோனையில் போஸ்டர் விளம்பரம் செய்துள்ளனர். இதன் மூலம் நடிகர் விஜய் அரசியலில் கோலோச்சுவார் என்பதையும் வாரிசு படத்தின் விளம்பரத்தையும் செய்துள்ளனர். விஜய் ரசிகர்கள் ஒட்டிய இந்த எதுகை மோனை போஸ்டர் கவனம் பெற்றுள்ளது.
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு போங்க அன்று வெளியாக உள்ளது. அதே தினத்தில் அஜித்தின் துணிவு படமும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் 'வீர சிம்ஹா ரெட்டி'
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ