சென்னை தண்டையார்பேட்டையில் மனைவியை கொன்ற கணவன் கைது!

வீட்டில் பார்ட்டி நடத்தியது பற்றி மனைவி தட்டி கேட்டதால் ஆத்திரம் அடைந்த கணவன் சேலையை வைத்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.      

Written by - RK Spark | Last Updated : Jan 4, 2023, 08:33 AM IST
  • மனைவியை கொலை செய்த கணவன்.
  • புத்தாண்டு பார்ட்டி கொண்டாடியதால் கோவம்.
  • போலீசார் கைது செய்து விசாரணை.
சென்னை தண்டையார்பேட்டையில் மனைவியை கொன்ற கணவன் கைது! title=

தண்டையார்பேட்டை கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் நந்தகுமார். 32 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார்.  இவரது மனைவியின் பெயர் பபிதா. 30 வயதான பபிதா பெண்கள் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்.  இவர்களுக்கு 9 வயதில் பெண் குழந்தையும் 7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். புத்தாண்டின் போது பபிதா தனது தாய் வீட்டிற்குச் சென்று விட்ட நிலையில் நந்த குமார் தனது வீட்டில் தன் நண்பர்களுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  காலை வந்த பபிதா அலங்கோலமாக இருந்த வீட்டினைப் பார்த்து தனது கணவரிடம் இது குறித்து கேட்டுள்ளார். 

மேலும் படிக்க | நாகூர் தர்காவின் 466 ஆம் ஆண்டு கந்தூரி சந்தனக்கூடு திருவிழா கோலாகலம்

இந்தப் பேச்சு வாக்குவாதமாக மாற ஆத்திரமடைந்த நந்தகுமார் பபிதாவை சேலையைக் கொண்டு கழுத்தை நெறித்துக் கொலை செய்து தள்ளிவிட்டுள்ளார். போதையில் இருந்ததால் மீண்டும் உறங்கச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து, தாய் எழவில்லை என்று குழந்தைகள் நந்தகுமாரிடம் கூற அவரும் எழுப்பியுள்ளார். பபிதா எழாத நிலையில் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பபிதா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

murder

தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் பபிதாவின் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவலர்கள் விசாரணை செய்ததில் நந்தகுமார் ஆத்திரத்தில் கழுத்தை நெறித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இது குறித்து விசாரணை செய்கின்றனர்.

மேலும் படிக்க | Thiruvalluvar Statue: கன்னியாகுமரி 133 அடி திருவள்ளுவர் சிலை மராமத்து பணிகள் நிறைவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News