ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று தமிழகம் முழுவதும் மனிதச் சங்கலி போராட்டம் நடைபெறள்ளது.
சென்னை அண்ணாசாலை பெரியார் சிலையில் இருந்து தேனாம்பேட்டை அன்பகம் வரை தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்காக சாலையின் ஒரு பகுதியில் அவர்கள் மனித சங்கிலி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க.வின் பல்வேறு அணி நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்கிறார்கள்.
ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைச் செல்லாது பிரச்னை உடனடியாக களையக் கோரி திமுக சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று கட்சித் தலைவர் மு. கருணாநிதி அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலை நகரங்களில் வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை மனிதச் சங்கிலி நடைபெறள்ளது. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மனித சங்கிலி போராட்டத்தை தொடங்கிவைக்கிறார்.
மாவட்ட அளவில் நடக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.