Chennai Rajiv Gandhi Government Hospital: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி என்ற பகுதியை சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதிக்கு ஒன்றரை வயதில் முகமது தஹீர் என்ற மகன் இருந்தார். 40 வாரங்களில் பிறக்க இருந்த குழந்தை, 32 வாரங்களிலேயே பிறந்துவிட்டது. இதனால், குழந்தையின் எடை மிகவும் குறைவாக இருந்துள்ளது. இதையடுத்து இந்த குழந்தைக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலேயே சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு மே மாதம்
குழந்தை பிறந்ததற்கு மூன்று மாதங்களுக்கு பின், குழந்தையின் தலையளவு அதிகரித்துள்ளது. இதனால், கடந்த ஆண்டு மே மாதம் குழந்தையை எழும்பூர் நல மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர். குழந்தைக்கு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதனால், அவர்கள் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தலையில் இருக்கும் நீரை வெளியேற்றும் வகையில் மருத்துவர்கள் தலையில் இருந்து வயிற்றுக்கு ஒரு குழாயை பொருத்தியுள்ளனர். இதையடுத்து குழந்தை தொடர் மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் குழந்தைக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
மேலும் படிக்க | தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல தமிழ்நாடு - முதலமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பதிலடி
கடந்த ஜூலை 2ஆம் தேதி
தொடர்ந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தைக்கு ரத்த உறைதலால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
இக்குழந்தைக்கு கடந்த ஜூலை 2ஆம் தேதி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வலது கையை அகற்றினர். தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், குழந்தை இன்று உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணையில் உறுதி
மேலும் குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலைமைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தவறாக சிகிச்சையே காரணம் என்று குழந்தையின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர். குழந்தையின் கை வீங்கியதால் செவிலியர்களை தாய் அழைத்ததாகவும், ஆனால், அவர்கள் அலட்சியமாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டினர்.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில், தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், மருந்து கசிவால் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
குழந்தைக்கு என்ன பாதிப்பு?
ரத்தநாள அடைப்பு செலுத்தப்பட்ட மருந்தினாலோ மற்ற சிகிச்சை முறைகளாலோ பாதிப்பு ஏற்படவில்லை. சூடோமோனாஸ் (pseudomonas) கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால், குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரை காப்பாற்றும் முயற்சியில் குழந்தையின் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை இன்று மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | '40ல் ஒன்னு கூட குறையக்கூடாது' அசைன்மென்டை தொடங்கிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ