சில நேரங்களில் நாம் சிறுநீர் கழிக்க்கும் போது, வலி அல்லது எரியும் உணர்வு ஏற்படலாம். இதை நாம் சாதாரணமாக நினைத்து அலட்சியப்படுத்த வேண்டாம். பின்னாளில் அது பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
கோனோரியா மற்றும் கிளமிடியா போன்ற சில நோய்த்தொற்றுகள் இருந்தால் நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது வலியை ஏற்படுத்தும். இவை சிறுநீர் குழாயில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வலி உணர்வு வருகிறது.
சிறுநீர்ப்பையில் அழற்சி, தொற்று இருந்தால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது வலி உணர்வு ஏற்படலாம். இதற்கான தகுந்த சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது.
சில சமயங்களில் பெண்களுக்கு ஈஸ்ட் தொற்று அல்லது பாக்டீரியா வஜினோசிஸ் போன்ற நோய் தொற்றுகளால் எரிச்சல் அல்லது வலி ஏற்படலாம்.
உங்கள் வயிற்றின் கீழ் பகுதியில் உள்ள தசைகள் மிகவும் இறுக்கமாக அல்லது பலவீனமாக இருக்கும்போது சிறுநீர் கழித்தால் வலி அல்லது கடுமையான உணர்வை ஏற்படுத்தலாம்.
நீங்கள் போதுமான தண்ணீர் குடிக்காதபோது நீரிழப்பு ஏற்படுகிறது, இது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது வலி உணர்வை ஏற்படுத்தும்.