சடலத்துடன் ஓரினச்சேர்க்கை - சைக்கோ வாலிபர் அடித்துக் கொலை..!

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் சைக்கோ கொலையாளியை கொன்று பழிக்குப்பழி தீர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 12, 2022, 05:28 PM IST
  • சைக்கோ ஓரினச்சேர்க்கையாளர்..!
  • திட்டமிட்டுத் தீர்த்துக்கட்டிய கும்பல்
  • பழிக்குப்பழியாக அரங்கேறிய கொடூரம்
சடலத்துடன் ஓரினச்சேர்க்கை - சைக்கோ வாலிபர் அடித்துக் கொலை..! title=

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகேயுள்ள நொச்சிக்குப்பம். மீனவ கிராமமான இங்குக் கடந்த 9ஆம் தேதி முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். சம்பவ இடத்திற்கு நேரில் வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தது, நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் அபினேஷ் என்பது தெரியவந்தது. அபினேஷின் மரணம் போலீசாரை புருவம் உயர்த்த வைத்தது. காரணம் அவர் கொடூர கொலைகாரக் கைதி. 

கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!

அபினேஷ் கொலை

அதே நொச்சிக்குப்பத்தில் 13 சிறுவன், ஓரினச்சேர்க்கைக்கு உள்ளாக்கிக் கொன்று புதைக்கப்பட்டார். அதன் அதிர்வலைகள் அடங்குவதற்குள் மேலும் ஒரு சிறுவன் அதே பாணியில் கொலை செய்து புதைக்கப்பட்டார். ஊரே அதிர்ச்சியில் உறைந்து போனது. விசாரணையில் நொச்சிக்குப்பத்தை சேர்ந்த அபினேஷ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். இறந்த சடலத்துடன் ஓரினச்சேர்க்கை வைத்துக்கொள்வது அபினேஷின் வக்கிர ஆசையாக இருந்தது. அதற்காக அடுத்தடுத்து இரண்டு சிறுவர்களை காவு வாங்கியதை போலீசில் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து கைதான அபினேஷை சிறையில் அடைத்தனர்.

அபினேஷ்

ஆம், இங்குக் கொல்லப்பட்டுக் கிடப்பது அதே அபினேஷ்தான். அபினேஷால் கொலை செய்து புதைக்கப்பட்ட சிறுவர்களின் மரணத்திற்கு பழிக்குப்பழியாக இந்த சம்பவம் அரங்கேறியதா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை தொடங்கினர். ஆனால் வழக்கு வேறு கோணங்களில் அடியெடுத்து வைத்தது. சிறையிலிருந்து வெளியே வந்த அபினேஷ் கோட்டக்குப்பம் பகுதியில் வசித்து வந்தார். திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட அசம்பாவிதங்களில் ஈடுபட்டு நாட்களை கடத்தியிருக்கிறார். அதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

 

இதற்கிடையே, அபினேஷின் ஓரினச்சேர்க்கை வெறி, அடங்கிய பாடில்லை. அதுவே அவரின் வக்கிர புத்தியை அதிகரிக்க வைத்தது. அபினேஷ் தான் வசித்து வந்த வீட்டின் மேல்தளத்தில் குடியிருந்த 7 வயது சிறுவனிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் சித்தப்பா கலையரசன் அபினேஷனை கடுமையாக கண்டிருத்திருக்கிறார். பிரச்சனை முடிந்துவிட்டது என்று ஊரே உறங்க சென்றது. ஆனால் மறுநாள் காலை சோலை நகர் கடலில் மர்மமான முறையில் சிறுவனின் சித்தப்பா இறந்து கிடந்தார். கலையரசனின் இறப்பு கண்டிப்பாக கொலையாகத்தான் இருக்குமென்று ஊரே நம்பியது. இதற்கெல்லாம் காரணம் அபினேஷ் என்று கலையரசனின் ஒட்டுமொத்த குடும்பமும் கொந்தளித்தது. இதில் ஆத்திரமடைந்த கலையரசனின் உறவினர் சதீஷ், தனது நண்பர்களான அப்பு,அஜீத் ராஜ், அகமது அசேன் உள்ளிட்ட 4 பேருடன் சேர்ந்து அபினேஷை போட்டுதள்ள திட்டம் தீட்டியிருக்கிறார். ஆள்நடமாட்டம் இல்லாத கோட்டக்குப்பம் மரைக்காயர் தோப்பில் வைத்து சுற்றிவளைத்தவர்கள் ஆத்திரம் தீர அபினேஷை கொலை செய்திருக்கிறார்கள். 

அபினேஷ் கொலை

மேலும் படிக்க | வீட்டில் 'சாத்தான்' ? - மூதாட்டி மற்றும் இளம்பெண் மோசமான நிலையில் மீட்பு

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அபினேஷின் கொலைக்கு காரணமான சதீஷ், அஜித்ராஜ், அகமத் அசேன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதம், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல்செய்து 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

சடலத்துடன் ஓரினச்சேர்க்கை

மேலும் தலைமறைவாக உள்ள அப்பு, அரவிந்த் ஆகிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பழிக்குப்பழி தீர்ப்பதற்காக ஓரினச்சேர்க்கை சைக்கோ கொலைசெய்யப்பட்ட சம்பவம் நொச்சிக்குப்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | தங்கச் சங்கிலிக்காக ‘நண்பனின் தாயை’ இரும்பு ராடால் அடித்து கொல்ல முயன்றவர் கைது..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News