விஜய்யுடன் எடுத்த பிரைவேட் புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா! “ஒரு வேள இருக்குமோ..”

Actress Trisha Actor Vijay Unseen Photo : நடிகை திரிஷா விஜய்யுடன் எடுத்துக்கொண்ட மிரர் செல்பியை ட்விட்டரில் பகிர்ந்ததில் இருந்தே, சினிமா வட்டாரத்தில் ஒரு புகைச்சல் கிளம்பியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Jun 24, 2024, 01:26 PM IST
  • விஜய்யுடன் எடுத்த போட்டோவை வெளியிட்ட த்ரிஷா
  • வெடித்த இணையதளம்!
  • இவர்களுக்குள் இருப்பது நட்பா?
விஜய்யுடன் எடுத்த பிரைவேட் புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா! “ஒரு வேள இருக்குமோ..”  title=

Actress Trisha Actor Vijay Unseen Photo : சமீபத்தில் 50வது பிறந்தநாளை கொண்டாடிய விஜய்க்கு, நடிகை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கங்களில் யாரும் பார்த்திராத விஜய்யின் புகைப்படத்தை வெளியிட்டார். இது, தற்போது இணையதளத்தில் பேசு பொருளாக மாறி வருகிறது. 

விஜய்-த்ரிஷா ரீ-யூனியன்..!

நடிகை திரிஷா குருவி படத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் லியோ படத்தில் ஜோடியாக நடித்தார். குருவி பட சமயத்தில் திரிஷா - விஜய் குறித்த கிசுகிசுக்கள் அதிகம் வந்த நிலையில், இருவரும் அதற்கு பிறகு ஒன்றாக நடிக்காமல் இருந்தனர். இந்நிலையில் தான் லியோ படத்தில் மீண்டும் இணைந்தனர். இந்த படம் ஹிட் ஆனதை அடுத்து, 20 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் - திரிஷா நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய கில்லி படம் ரீ ரிலீஸ் ஆனது. இந்த படம் வசூலில் மீண்டும் மிரட்டியது. ஒரு ரீ ரிலீஸ் படம் இவ்வளவு வசூலை குவிக்குமா என சினிமா வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியது. 

அதோடு தற்போது விஜய் நடித்து வரும் கோட் படத்திலும், திரிஷா ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக சொல்லப்பட்டுகிறது. இந்த சூழலில் நேற்று முந்தினம் விஜய்க்கு பிறந்தநாள். அவரது பிறந்தநாள் முடிந்த அடுத்த நாள், விஜய்யுடன் லிப்ட் ஒன்றில் எடுத்துக்கொண்ட மிரர் செல்பியை இன்ஸ்டாவில் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அமைதியில் இருந்து புயல்.. புயலில் ஒருந்து அமைதி.. இன்னும் நிறைய சாதனைகள் செய்ய வேண்டும் என்பது போல எழுதியிருந்தார். இந்த புகைப்படத்தை இதுவரை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 

“ஒரு வேளை இருக்குமாே..”

இந்த பதிவின் கீழ் பலரும், பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒருசிலர் கோட் பட ஷூட்டிங்கில் எடுத்ததா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் ஒருசிலரோ ஒருவேளை இருக்குமோ, விஜய்க்கு விவாகரத்து ஆகிவிட்டதா என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ஆமா நயன்தாராவுடன் மனக்கசப்பு தான்.. உண்மையை உடைத்த த்ரிஷா

விஜய் தனது மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இயக்குனர் சங்கர் மகளின் திருமணத்துக்கு சங்கீதா தனியாக வந்திருந்தார். வழக்கமாக கணவரின் பட நிகழ்ச்சிகளுக்கு அவருடன் செல்லும் சங்கீதா, கடந்த இரு படங்களில் அவருடன் வரவில்லை. இதனால் ஏற்கனவே இவர்களுக்கு விவாகரத்து நடக்க உள்ளதாக பேச்சுகள் அதிகமானது. இந்த சமயத்தில் திரிஷா விஜய்யுடன் தனியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருப்பது மீண்டும் ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளது.

மனைவியை பிரிந்த விஜய்?

நடிகர் விஜய், தனது மனைவி சங்கீதாவை விட்டுப்பிருந்து 4 வருடங்கள் ஆவதாக கூறப்படுகிறது. விஜய் நடித்த படங்களின் விழாவிற்கு வருகை தந்து கொண்டிருந்த சங்கீதா, கடந்த சில ஆண்டுகளாக பட விழாக்களுக்கு வருவதை தவிர்த்தார். இதற்கான காரணமும் என்ன என்பது தெரியவில்லை. இதிலிருந்துதான் ரசிகர்களுக்கு சந்தேகம் எழ ஆரம்பித்தது. அது மட்டுமன்றி, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சையும் ஒரு படத்தை சமீபத்தில் இயக்க இருக்கிறார். இவரை ஒரு முறை கூட தற்போது விஜய் சந்தித்து பேசவில்லை என்றும், குடும்பத்தை விட்டு விஜய் விலகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

த்ரிஷா-விஜய்க்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள், இவர்கள் பல ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக இருப்பதாகவும் அந்த நட்பை இப்படி கொச்சைப்படுத்தி பேச வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க | Thalapathy 50: ‘தளபதி’ 50 ஸ்பெஷல்..விஜய் குறித்த 50 சுவாரஸ்ய தகவல்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News