தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தம் 232 தொகுதிகளும், கேரளாவில் 140 தொகுதிகளும், புதுச்சேரியில் 30 தொகுதிகளும், அசாமில் 126 தொகுதிகளும் மற்றும் மேற்கு வங்காளத்தில் 294 தொகுதிகளும் சட்டசபை தேர்தல் முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தொகுதி வாரியாக பிரிக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களில் ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறை முழுவதும் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ள. அதைசுற்றி துணை ராணுவப் படை வீரர்களும், மாநில போலீஸாரும், அந்த ஏரியா லோக்கல் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
காவல் துறையின் கட்டுப்பாட்டில் வாக்கு எண்ணும் மையங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணும் இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதை ஆராய தனியாக கட்டுப்பாட்டு அறையும் தொடங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் இடத்துக்கு வெளியாட்கள் யாரும் செல்லவும், செல்போன்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தனியாக தடுப்புகள் அமைக்கப் பட்டுள்ளன. அங்குதான் கட்சி தொண்டர்கள் நிற்க வேண்டும்.
8 மணிக்கு நாளை காலை வாக்கு எண்ணிக்கை தொடங்க இருப்பதால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்லும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பூத் ஏஜெண்டுகள் ஆகியோர் அமர்வதற்கு தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாநில காவல் ஆணையர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை குறித்து ஆய்வு செய்து வருகின்றன.