வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் இரவு 7 மணிக்கு துவங்கிய மழையானது நள்ளிரவு வரை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது. நாகை நாகூர் வேளாங்கண்ணி வாஞ்சூர் திட்டச்சேரி கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் சுற்றி சுழன்றடித்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
மேலும் படிக்க | உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை - சென்னையில் சோகம்
தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்து சூறைக் காற்றுடன் பல மணி நேரம் கனமழை நீடித்ததால் நாகை உள்ளிட்ட பல்வேறு கடலோர கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 3 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டிருந்ததால், பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். இதனிடையே நாகையில் பெய்த கன மழை காரணமாக புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கியது இதனால் பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் குண்டும் குழியுமான சாலைகளில் தட்டு தடுமாறி பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, மதுரை மற்றும் மேலும் சில இடங்களில் மழை பெய்தது. நேற்று முதலே சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காட்டி அளிக்கிறது.
மேலும் படிக்க | பம்புக்கு மேல் ரோடு: அலப்பறை செய்த அதிமுக ஒப்பந்ததாரர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ