மதுரையில் பெய்த கனமழையில் மணி நகரம் ரயில்வே தரைப்பாலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் சிக்கிய நபர்களை காவல்துறையினர் மீட்டு உயிரை காப்பாற்றி உள்ளனர். மேலும் மூன்று மணி நேரத்திற்கு மேல் பெய்த கன மழையால் வெள்ள நீரில் ரயில்வே தரைப்பாலங்கள் மூழ்கின. மதுரை மாவட்டம் முழுவதிலும் 3 மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை தொடர்ச்சியாக செய்து வருகிறது. மதுரை ரயில் நிலையம், ஆரப்பாளையம் அண்ணாநகர், சிம்மக்கல், மாட்டுத்தாவணி திருப்பரங்குன்றம், ஆனையூர், கோரிப்பாளையம் பழங்காநத்தம், பைபாஸ் சாலை, அவனியாபுரம் வில்லாபுரம், விமான நிலையம், திருநகர் உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் அதிக அளவில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓட தொடங்கியது.
மேலும் படிக்க | சாதி மறுப்பு திருமணம் செய்தால் 2.5 லட்சம் நிதியுதவி - எப்படி பெறுவது?
இதில் மதுரை மணி நகரம் ஒர்க்ஷாப் ரோடு சாலை பகுதியில் அமைந்துள்ள ரயில்வே தரைப்பாலத்தில் மழை நீரானது 5 அடி உயரத்திற்கு வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியதால் பாலத்தை கடக்க சென்ற காவல்துறை வாகனம் வெள்ளத்தில் சிக்கியது. இதனையடுத்து காவல்துறை வாகனத்தில் இருந்த காவல்துறையினர் நீந்தி தப்பினர். இதனைத் தொடர்ந்து பின்னால் வந்த மற்றொரு காரில் 3 பேருடன் வந்த கார் ஒன்று மழை வெள்ளத்தில் சிக்கிய நிலையில் அங்கு மிதந்துவந்த காவல் துறையினர் கடும் சிரமத்துடன் காரில் இருந்த மூவரையும் பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர். இதேபோன்று பாலத்தின் வழியே கடக்க சென்ற பைக்குகள், ஆட்டோக்கள், சரக்குவாகனங்கள் என பல்வேறு வாகனங்களும் வெள்ள நீரில் சிக்கி உள்ளதால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
இதுபோன்ற கனமழை பெய்யும்போது தரைப்பாலங்களில் போக்குவரத்தை தடை செய்ய உடனடியாக தடுப்புகள் அமைத்து மாநகராட்சி அல்லது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால், இதுபோன்ற இழப்புகளை தடுத்திருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். மதுரை மாநகரின் மையப் பகுதியில் இரவு நேரத்தில் நேரத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் தொடர்ந்து வாகன ஓட்டுனரை எச்சரித்த நிலையிலும் அதனை கண்டு கொள்ளாமல் வெள்ள நீருக்குள் சென்றதால் கார் முழுவதிலும் நீரில் மூழ்கியது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மதுரை தத்தனேரி மற்றும் பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் கருடன் தரைப்பாலும் உள்ளிட்ட ரயில்வே தரைப்பாலங்கள் முழுவதிலும் நீரில் மூழ்கியது.
புதுக்கோட்டையிலும் கன மழை
புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளும் வேலைக்கு செல்லும் பெண்களும் மற்றும் வயதானவர்களும் என அனைவரும் கடுமையான வெப்பத்தின் தாக்கத்தால் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இன்று அதிகாலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை நேரத்தில் கருமேயங்கள் சூழ இரவு ஏழு மணிக்கு மேல் தொடங்கிய கனமழை புதுக்கோட்டையில் முக்கிய வீதிகளான டிவிஎஸ் பழனியப்பா கார்னர் பிருந்தாவனம் கீழ ராஜ வீதி ஆகிய முக்கிய சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு தண்ணீரை கடந்து சென்றனர். மேலும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனால் பழனியப்பா கார்னரில் தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர்.
மேலும் படிக்க | வடகிழக்கு பருவமழை.. நாமக்கல், திருச்சிக்கு ஆரஞ்சு அலெர்ட் - கனமழை கொட்டப்போகுது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ