உடல் ஆரோக்கியம், விளையாட்டுகளில் சாதிக்க குழந்தைகளுக்கான கூடம்!

கோவையில் துவங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய விளையாட்டு பயிற்சி மையம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 28, 2022, 08:34 AM IST
  • கோவையில் துவங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உடற்பயிற்சி கூடம்
  • விளையாட்டு பயிற்சி மையம்.
உடல் ஆரோக்கியம், விளையாட்டுகளில் சாதிக்க குழந்தைகளுக்கான கூடம்! title=

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகர் முழுவதையும் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி குளக்கரைகளில் நடைபாதைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் உணவகங்கள் அமைக்கப்பட்டன. 

இதற்கிடையில் கோவையில் துவங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய விளையாட்டு பயிற்சி மையம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க | தற்கொலைக்கு ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு

தற்போது உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், பல்வேறு விளையாட்டுகளில் சாதிக்க மாணவ,மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் கோவை வடவள்ளி பகுதியில் குழந்தைகளுக்கான உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய விளையாட்டு பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது.

க்ரீன் நெஸ்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி எனும் பெயரில் துவங்கப்பட்டுள்ள இதற்கான துவக்க விழாவை முன்னிட்டு,டேலண்ட் ஆப் வடவள்ளி எனும் பன்முக திறன் போட்டி நடைபெற்றது.இதில்,குழந்தைகளுக்கான ஓவிய போட்டிகள்,மற்றும் தனிப்பாடல்,நடனம் போன்ற போட்டிகள் நடைபெற்றது. 

இதே போல விளையாட்டு வீர்ர்களும் கலந்து கொண்ட டென்னிஸ் போட்டிகளும் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீர்ர்களுக்கு க்ரீன் நெஸ்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைவர் கோபால் மற்றும் நிர்வாக இயக்குனர் ராதா ஆகியோர் பரிசுகளை வழங்கினார்.

இதற்கிடையில் கோவையில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்கா, உடற்பயிற்சி கூடம்,மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதைகள் ஆகியவற்றை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் படிக்க | டி ஷர்ட், பேண்ட்டுடன் மனித எலும்புக்கூடு - கூடுவாஞ்சேரியில் அலறிய மக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News