'பெரியாரின் பேரன் என சொல்லும் நீங்கள்' பெண் அமைச்சரை இப்படி பேசலாமா? - ஹெச்.ராஜா நறுக்

Tamil Nadu Latest News Updates: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாகரீகமற்ற வகையில் விமர்சித்ததாக கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு, பாஜகவின் ஹெச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 17, 2024, 09:15 PM IST
  • இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
  • பகீரங்க மன்னிப்பு கேட்க ஹெச். ராஜா கோரிக்கை
  • ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது கடும் சாடல்
'பெரியாரின் பேரன் என சொல்லும் நீங்கள்' பெண் அமைச்சரை இப்படி பேசலாமா? - ஹெச்.ராஜா நறுக் title=

Tamil Nadu Latest News Updates: தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச். ராஜா (H Raja) அவரது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு (EVKS Elangovan) கடும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.  அதில்,'அவர் (நிர்மலா சீதாராமன்) பெண் அமைச்சர்... ஆகவே அடக்கமாக இருக்க வேண்டும்" என்று கூறும் துணிவு உங்களுக்கு எப்படி வந்தது என ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் ஹெச்.ராஜா அந்த பதிவில்,"நான் பெரியாரின் பேரன் என்று கூறிக் கொள்ளும் நீங்கள், நமது நாட்டின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்து, இன்று நமது மத்திய நிதியமைச்சராக பொறுப்பில் இருக்கும் நிர்மலா சீதாராமனை பார்த்து, 'பெண் அமைச்சருக்கு அடக்கமும் பணிவும் தேவை' என்று கூறியிருப்பது, பெண் தலைவர்களின் மீதான உங்கள் காழ்ப்புணர்ச்சியை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

'பெண்கள் மீது நாகரிகமற்ற விமர்சனம்'

வெளிநாட்டிற்கு சென்றாலும் சரி, உள்நாட்டில் இருந்தாலும் சரி, நமது தாய் நாட்டையும் தாய் நாட்டுப் பெண்களையும் தொடர்ந்து அவமதிப்பதும், அவர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சிப்பதும் காங்கிரஸ் கட்சிக்காரர்களின் வாடிக்கையாகிவிட்டது. பெண்களைத் தங்கள் இஷ்டம் போல் நாகரிகமின்றி விமர்சிப்பது உங்கள் இரத்தத்திலேயே ஊறிய ஒன்று என்பது யாவரும் அறிந்ததே" என மறைமுகமாக ராகுல் காந்தி மீது தனது விமர்சனத்தை வைத்துள்ளார்.

மேலும் படிக்க | விசிக மாநாடு ஏமாற்றும் செயல்... காட்டமாக தாக்கிய ஹெச் ராஜா!

மேலும் அந்த பதிவில்,"அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெரும் தலைவர்களான பிரதமரும் (மோடியும்), ஜெயலலிதாவும் சந்தித்துக் கொண்டதைக் கொச்சைப்படுத்தி, தமிழக மக்களின் கடும் கோபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டும் கூட உங்களுக்கு புத்தி வரவில்லையா?

'மன்னிப்பு கேட்க வேண்டும்'

அதேபோல, கடந்த ஆண்டு உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த சேலம் மாநகராட்சி பெண் துணை மேயரை, 'என்ன ரொம்ப அழகாயிட்ட வர' என்று துளியும் விவஸ்தையில்லாமல் பொதுவெளியில் மீண்டும் விமர்சித்தவர் தானே நீங்கள்...? இன்று மத்திய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒரு பெண் அமைச்சரைப் பற்றி சிறிதும் மாண்பற்ற விதத்தில் விமர்சிக்க துணிந்திருக்கும் உங்கள் குறுகிய சிந்தனை கடும் கண்டனத்திற்குரியது. 

இவ்வாறு, பெண்கள் அதிகாரத்தில் இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத நீங்கள், மக்களின் உரிமைகளைத் தீர்மானிக்கும் அரசியல் வாழ்க்கைக்கு சற்றும் அருகதையற்றவர். எனவே, தொடர்ந்து பெண்களை ஆட்சேபிக்கும் விதத்தில் விமர்சித்து வரும் நீங்கள், நமது மத்திய நிதியமைச்சர் குறித்த சர்ச்சைக்குரிய விமர்சனத்திற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதுதான் ஒரு மூத்த அரசியல் தலைவருக்கான மாண்பு" என பதிவிட்டுள்ளார்.

நிர்மலா சீதாராமன் விவகாரம் 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) சமீபத்தில் கோவைக்கு வந்திருந்தபோது வியாபாரிகளுடனான கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது கோவை (Coimbatore) அன்னப்பூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசன் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி கேட்ட வீடியோ வைரலானது. அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, சீனிவாசன் நிர்மலா சீதாராமனை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டுள்ளார். 

சீனிவாசன் மன்னிப்பு கேட்டபோது அதை வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் பதிவிட்டார். இந்த வீடியோவும் வைரலாகி நாடு முழுவதும்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையொட்டி, ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் கேள்வி எழுப்பியதற்கு, நிர்மலா சீதாராமன் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். தற்போது இந்த கருத்துக்குதான் ஹெச்.ராஜா கண்டனத்தை எழுப்பி உள்ளார். 

மேலும் படிக்க | தமிழாசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு அப்பட்டமான இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு: ராமதாஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News