பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியாது என்றும் தற்போது இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகார் ராவ் கூறியதாகவும் திருமாவளவன் இன்று கூறியுள்ளார்.
எடப்பாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சில எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்ற தாகலும், அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் தங்கியுள்ளதாலும் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் எடப்பாடி அரசு தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டாக ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். ஆளுநரை சந்தித்த பின் எதிர்க்கட்சிகள் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது திருமாவளவன்,
தற்போதைய சூழ்நிலையில் சட்டப்படி தலையிட முடியாது என ஆளுநர் கூறிவிட்டார் எனவும் இரு குழுவாக பிரிந்துள்ளதால் அதில் தலையிட முடியாது என ஆளுநர் தெரிவித்தார் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று ஆளுநர் கூறியுள்ளார்.
ஆளுநர் தற்போது சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியாது என்று கூறிவிட்டதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.