அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய தமிழக அரசு முடிவு

அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 5, 2020, 08:59 PM IST
அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய தமிழக அரசு முடிவு title=

சென்னை: அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) தெரிவித்துள்ளார். அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "இளைஞர்களின் பணத்தையும், நேரத்தையும் வீணடித்து வாழ்க்கையை சீர்குலையச் செய்வதோடு, உயிரையும் பறிக்கும், பணம் வைத்து விளையாடக்கூடிய அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு முடிவு செய்துள்ளது" என ட்வீட் செய்துள்ளார். 

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக இதுவரை பத்துக்கு மேற்பட்டோர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டு உள்ளனர். இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என அரசியல் கட்சி உட்பட பல்வேறு தரப்பினர் தமிழக அரசிடம்  கோரிக்கை வைத்தனர்.

ஆன்லைன் சூதாட்டம் (Online Gambling) தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு அது தொடர்பாக முடிவு எடுக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. 

ALSO READ | தமிழகத்தில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்: தமிழக அரசு

இந்தநிலையில்,  உயிரையும் பறிக்கும் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி என அறிவித்திருப்பது அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News