Gossip News Tamil : தமிழக அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டுக்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார். எந்தவொரு தவறும் நடந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அவர், அரசியல் களத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மாநாட்டை ஒருங்கிணைக்கவும், ஏற்பாடுகளை சரியாக செய்யவும் பல்வேறு குழுக்களை அமைத்துள்ளார். முதல் மாநாட்டே தமிழ்நாடு மக்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என நினைக்கிறார் நடிகர் விஜய். காவல்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளிலும் எந்தவொரு சமரசமும் செய்து கொள்ளக்கூடாது, அனைத்தும் முறையாக கடைபிடிக்கும் வகையில் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கமும் நடத்தி அதன் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி உள்ளார். இது ஒருபுறம் இருக்க, சீமானிடம் தள்ளியே இருக்கும்படி முன்னாள் நாதக புள்ளி விஜய்க்கு கொடுத்த ஆலோசனை குறித்த அப்டேட் இப்போது லீக்காகியுள்ளது.
அதாவது, தமிழக வெற்றிக் கழகத்தில் என்னென்ன தவறுகள் நடக்கக்கூடாது என்பதற்காக மற்ற கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொண்டு அதன் மூலம் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் என சிலரிடம் ஆலோசனை செய்திருக்கிறார் விஜய். இந்த ஆலோசனையில் முன்பொரு காலத்தில் நாதக புள்ளியாக இருந்த புள்ளியும் கலந்து கொண்டாராம். அப்போது, தமிழ்நாட்டு அரசியல் களம் குறித்த தன்னுடைய பார்வைகள விஜய்யிடம் பகிர்ந்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் மக்களிடம் எப்படியாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது, ஒவ்வொரு கட்சியுடைய கொள்கைகளில் எது மக்களை ஈர்த்திருக்கிறது, அக்கட்சிகள் எப்படி மக்களிடம் வாக்குகளை சேகரிக்கின்றன என்ற விவரங்களை அந்த முன்னாள் நாதக புள்ளி சொல்லியிருக்கிறார்.
மேலும் படிக்க | தீபாவளிக்கு 4 நாள் லீவு... குஷியில் மாணவர்கள், அரசு அலுவலர்கள் - வந்தாச்சு உத்தரவு
திமுக, அதிமுக, விசிக, பாஜக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகள் குறித்தும் அந்த நாதக புள்ளி விஜய்யிடம் எடுத்துக் கூறியுள்ளார். அப்போது, நாதக கட்சியின் வளர்ச்சி குறித்தும், அக்கட்சி செய்து கொண்டிருக்கும் தவறுகளையும் விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் அவர். அதாவது, மற்ற கட்சியின் செயல்பாடுகளை தெளிவாக கேட்டதைப் போலவே விஜய், நாதக கட்சியின் செயல்பாடுகளை பற்றி கேட்டிருக்கிறார். அந்த கேள்விக்கு பதில் கூறும்போது தான், நாதக அரசியல் கொள்கை, அதில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் சீமானின் முந்தைய ஆவேச பேச்சுகள், தேர்தலுக்கு தேர்தல் எடுத்துக் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள், தொடர் தேர்தல் தோல்விகள், நிர்வாகிகள் தொடர் வெளியேற்றம் ஆகியவை குறித்து அந்த நாதக புள்ளி கூறியிருக்கிறார். அவை மக்கள் மன்றத்தில் என்னவாக இப்போது சேர்ந்திருக்கிறது என்பதையும் கூறியிருக்கிறார்.
அந்த முன்னாள் நாதக புள்ளி விஜய்யிடம் பேசும்போது, " தமிழ்நாடு அரசியல் களத்தில் கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் சீமான், இளைஞர்களின் வாக்குகளை பெருமளவு பெற்று வருகிறார். ஆனாலும் அவரால் தேர்தல் களத்தில் எதிர்பார்க்கும் வெற்றிகளை பெற முடியவில்லை. ஏன்னா,.. அதற்கு அவருடைய பேச்சுகள் தான் காரணம். சமூக ஊடகம் வழியாகவே மக்களை அதிகம் சென்றடைந்தவர் சீமான். இப்போது அதன் வழியாகவே சறுக்கலையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார். எந்தவொரு பிரச்சனை என்றாலும் கருத்து சொல்லும் சீமான், முன்பொரு பேச்சு, இப்போது ஒரு பேச்சு என பேசுவது மக்களுக்கு பிடிக்கவில்லை.
அவர் பேசிய வீடியோக்களை வெட்டி ஒட்டி இணையவாசிகள் பரப்புவதை மக்கள் பார்க்கிறார்கள். சர்வாதிகாரி போல சீமான் கட்சி நடத்துகிறார். அவரை தாண்டி கொள்கையாக நாதக மக்களிடம் செல்லவில்லை. அவர் மீது நெகடிவ் இமேஜ் தான் இருக்கிறது. அவருடன் நீங்கள் சேர்ந்தால் சீமான் எடுத்த அரசியல் நிலைப்பாடுகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். புதிதாக அரசியல் களத்துக்கு வந்திருக்கும் உங்களுக்கு இது மிகப்பெரிய நெருக்கடியாக மாறும். அதனால், இப்படியான நெகடிவ் இமேஜ் ஆரம்பத்திலேயே உங்களுக்கு வேண்டாம். மக்களிடம் செல்வாக்கு பெரும் வரை சீமானிடம் இருந்து தள்ளியே இருங்கள்" என கூறியிருக்கிறாராம். இதைக் கேட்டுக் கொண்ட விஜய், தலை ஆட்டிவிட்டு அமைதியாக சென்றிருக்கிறார்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு அமைச்சர் கொடுத்த குட்நியூஸ்..! அவசரப்படாதீங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ