டீக்கடையில் காத்திருந்த தயாரிப்பாளரை பார்க்க வந்த இயக்குநர், தனக்கு தெரிந்த சினிமா வட்டார தகவல்களோடு கொஞ்சம் அரசியலையும் சேர்த்து பேச தொடங்கினார். வாங்க டைரக்டரே என அழைத்த தயாரிப்பாளர் ஏதாவது கதை இருந்தா சொல்லுங்கோ என கேட்க, இயக்குநரோ தனக்கு தெரிந்த சினிமா வாரிசு கதையை சொல்ல ஆரம்பித்துவிட்டார். "அண்ணே போன வாரம் ’வருங்காலங்களுக்கு’ சினிமா வாரிசு நடத்திய அந்த விழா மக்கள் கிட்ட நல்லாவே ரீச்சாகியிருக்கு. கட்சி கடந்து எல்லோரும் அதை மனசாரா பாராட்டியிருக்காங்க. தெளிவாக நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணி கச்சிதமாக முடிச்சிருக்கு சினிமா வாரிசு தரப்பு. அதுமட்டுமில்லாம அன்னைக்கு பேசுன பேச்சும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கு. இறங்கப்போற களத்த சினிமா வாரிசு சரியா புரிஞ்சு வச்சிருக்கிறாருனு அவரோட பேச்சை பார்த்த எல்லோரும் சொல்றாங்க" படபடன்னு பேசினார்.
மேலும் படிக்க | கிசுகிசு : பிளாக் ஷீப்களால் வரும் நெருக்கடியால் செம டென்ஷனில் முதன்மையானவர்
’ அது சரி... முதல் கூட்டத்துல பேசாதவரு, ஏன் ரெண்டாவது கூட்டத்துல பேசுனாரு?’ என தயாரிப்பாளர் குறுக்கிட்டு கேட்க, ‘அண்ணே முதல் கூட்டம் நல்லபடியா முடிஞ்சுதுனு மகிழ்ச்சியா தான் இருந்தாரு சினிமா வாரிசு. ஆனால், வருங்காலங்கள கவுரப்படுத்திவிட்டு, அவங்களுக்கு இருக்கிற பிரச்சனையைகூட பேசலனா எப்படி? என சரமாரியாக எல்லோரும் கேள்வி எழுப்பினாங்களா... அத சினிமா வாரிசு தொலைக்காட்சிகளிலும், சோஷியல் மீடியாவிலும் பார்த்து தெரிஞ்சுக்கிட்டாரு. அதனால் ரெண்டாவது கூட்டத்துல பேசிறனும் என்கிற முடிவுக்கு வந்தாரு’ என இயக்குநர் சொல்ல, ’ சரி, சினிமா வாரிசுக்கு யாரு இப்படி தகவல்களை எழுதி கொடுத்தாங்க?, நல்லா தெளிவா பேசியிருக்கிறாரே..!’ என அடுத்த கேள்வியை போட்டாரு தயாரிப்பாளர்.
பாதி டீயை குடிச்சுக்கிட்டே பதிலை சொன்ன இயக்குநர், " அண்ணே, வருங்காலத்துங்களுக்கு இருக்கிற இந்த விஷயம் சட்டப் பிரச்சனை. அதனால தனக்கு தெரிஞ்ச மூத்த வக்கீல்களோட ஆலோசனை நடத்தியிருக்கிறாரு சினிமா வாரிசு. அவங்க மட்டும் இல்லாம கல்வியாளர்கள், அரசியல்ல இருக்கும் நண்பர்கள் கிட்ட பேசியிருக்கிறாரு. அதன் வழியாக ‘அந்த தேர்வு’ குறித்து தெளிவா புரிஞ்சுகிட்டு, பக்காவான ஸ்கிரிப்டு ஒன்னு ரெடி பண்ணி, மேடையில சூப்பரா டெலிவரி பண்ணியிருக்காரு. மாநிலப்பட்டியல், கல்வி, ஒன்றிய அரசு போன்ற வார்த்தைகளையும் அவரு கவனமாக பயன்படுத்தியிருக்காரு. அதன் மூலமே அவரு எந்த நிலைப்பாட்டை எடுக்கப்போறாருன்ற ஒரு தெளிவான புள்ளியையும் மக்கள் கிட்ட காண்பிச்சிட்டாரு.
இபோத்தைக்கு ரெண்டு படமும் ரிலிஸ் ஆகட்டும். அதுக்கப்பறம் முழுசா இறங்கிக்கலாம் அப்படிங்கற முடிவுல இருக்கிறாரு சினிமா வாரிசு. அதுவரைக்கும் தடபுடலா யாரையும் விமர்சிக்காம, சைலண்ட் மோடுல டீல் பண்ணலாம் அப்படிங்கிறது தான் இப்போதைக்கு இருக்கும் ஐடியாவாம். அதுமட்டுமில்ல, சினிமா வாரிசோட பேச்ச கேட்டதுக்கப்பறம் பெரிய கட்சியில அதிருப்தியில் இருக்க பெரிய தலைகள் கூட இந்த பக்கம் போலாமா என்ற யோசனைக்கும் வந்திருக்கங்காங்களாம். அதுல முன்னணியில் இருப்பவர்கள் யாருன்னு பார்த்தா?, சீட் கிடைக்காதவங்க, அதிருப்தியில் இருப்பவங்க பட்டியல் தான் அதிகமாக இருக்காம்."
தயாரிப்பாளர் ; சரி, இந்த விஷயத்துல சினிமா வாரிசு என்ன நிலைப்பாடு எடுக்கப்போறாரு?
இயக்குநர் : நீங்க கேட்கிறது சரி தானே, இந்த விஷயத்திலையும் கவனமாக இருக்கணும்ங்கிறதல சினிமா வாரிசு தெளிவா தான் இருக்கிறாராம். ஏற்கனவே ஊழல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு நோ என்ட்ரி என்பதில் தெளிவா இருக்கிறாராம். எந்த பெரிய பிரச்சனைகளிலும் சிக்காதவர்கள், மிஸ்டர் கிளீன் என பெயர் எடுத்தவங்களுக்கு மட்டும் என்ட்ரி கொடுக்கலாம், அப்படிங்கிறது தான் அவரோட திட்டமாம். அதேநேரத்துல, ஏற்கனவே பல கட்சி மாறின ஒரு ஆலோசகர் சினிமா பக்கம் வர்ற ஐடியாவுல இருக்கிறாராம். அதைப்பற்றி இப்போ சொல்ல நேரம் இல்லை, நாளைக்கு சொல்கிறேன்" என சொல்லிக்கொண்டே தயாரிப்பாளருக்கு பாய் சொல்லிவிட்டு கிளம்பினார் இயக்குநர்.
மேலும் படிக்க | கிசுகிசு : பூ கட்சியில் சில்லு வண்டுகளின் மோப்பம்: மலர்களின் குமுறல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ