தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி!! 6 மாதங்களில் நெல் சாகுபடி பரப்பு 3.12 லட்சம் ஏக்கரில் இருந்து 3.42 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது என கூறியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இரண்டு நாள் பயணமாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ரூ.237 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 43 ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்குகினார்.
மேலும் ரூ.98 கோடியே 77லட்சம் மதிப்பில் முடிவுற்ற 910 பணிகளையும் அவர் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, ரூ.894 கோடியே 6 லட்சம் மதிப்பிலான 133 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே 2-ம் உலகப்போர் நினைவாக அமைக்கப்பட்ட மணிக்கூண்டுடன் கூடிய ராஜப்பா பூங்கா ரூ.3.36 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளதையும், தஞ்சாவூர் கீழவாசலில் சரபோஜி சந்தையில் ரூ.15.25 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 309 கடைகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும் மண்டல கண் மருத்துவமனைக்கான புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்த அவர், அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தை ரூ.5 கோடியில் மேம்படுத்தும் பணிக்கும் அடிக்கல் நாட்டினார்.
ALSO READ | அரசு ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: அகவிலைப்படியை அதிகரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "காவிரியில் தமிழ்நாட்டிற்கான (Tamil Nadu) நீர்ப்பங்கீட்டை இடைக்காலத் தீர்ப்பு மூலம் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் பெற்று தந்தார். தமிழ்நாட்டில் தற்போது ஆங்காங்கே கோரானா தொற்று தலைதூக்க துவங்கியுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சியை ஒத்திவைக்கலாமா என கருத்து கேட்டேன். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பயனாளிகளில் 5,000 பேர் வரை மட்டுமே நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்டனர். எஞ்சிய பயனாளிகளுக்கு ஓரிரு நாளில் வீடு தேடி நலத்திட்ட உதவிகள் வரும்." என்றார்.
தமிழ்நாட்டில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிப்பதில் இந்த ஆறு மாத காலத்தில் அரசு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நெல் சாகுபடி பரப்பு 3.12 லட்சம் ஏக்கரில் இருந்து 3.42 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
"நெல் கொள்முதல் (Paddy Cultivation) நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கான கூலி ரூபாய் 3.25- லிருந்து ரூபாய் 10 ஆக உயர்ந்துள்ளது. நிதி நெருக்கடி இருந்த போதிலும் ரூபாய் 83 கோடி செலவில் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. நெல் கொண்டு வரும் விவசாயிகள் எந்த புகாரும் கூறாத வகையில், கொள்முதல் நிலைய ஊழியர்களின் பணி தேவை" என அவர் தெரிவித்துள்ளார்.
ALSO READ | உடனடியாக மாற்று வீடு, ஒரு லட்சம் ரொக்கம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR