Tamil Nadu School Latest Updates: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
காலாண்டு தேர்வு விடுமுறை
செப்டம்பர் 28, 29, 30, மற்றும் அக்டோபர் 1, 2 என செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை என ஐந்து நாட்கள் மட்டும் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தற்போது இந்த விவகாரம் விவாதமாக மாறியுள்ளது.
காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களை பார்த்தால், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் காந்தி ஜெயந்தி என மூன்று நாட்கள் விடுமுறையில் அடங்கி விடுகிறது. மீதமுள்ள இரண்டு நாள் மட்டும் தான் காலாண்டு தேர்வு விடுமுறை கணக்கில் வருகிறது.
ஆசிரியர் சங்கம் கோரிக்கை
இதன் காரணமாக ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளனர். அதில் இந்தமுறை காலாண்டு தேர்வு விடுமுறையை ஒன்பது நாட்களாக அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த கல்வியாண்டில் காலாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் இருந்தது. அதேபோல இந்தமுறையும் ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த குறைந்த விடுமுறை நாட்களில், ஆன்சர் எக்ஸாம் பேப்பர் வேல்யூவேஷன் மற்றும் எக்ஸாம் ரிசல்ட் முடிவுகள் போன்ற பணிகளை மேற்கொள்வது அதிக சுமையை ஏற்படுத்தும். பணிகள் அதிகமாக இருப்பதால், காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களை ஒன்பது நாளாக அதிகரிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், இரண்டு நாட்கள் தான் வேலை செய்ய ம,ஊதியும். அதன்பிறகு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வரும். எனவே அக்டோபர் 7 ஆம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரிக்கையை வைத்துள்ளனர்.
பள்ளி வேலை நாட்கள் 210 குறைப்பு
சமீபத்தில் பள்ளி வேலை நாட்கள் அதிக்கப்படுத்தி 220 நாட்கள் வேலை என்ற அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. இதற்கு ஆசிரியர் சங்கம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மீண்டும் பள்ளி வேலை நாட்களை 210 ஆ குறைக்கப்பட்டு திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிடப்பட்டது.
தமிழக அரசு ஆலோசனை
தற்போது ஐந்து நாள் காலாண்டு விடுமுறையை, ஒன்பது நாளாக அதிகரிக்க வேண்டும் என்ற ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே காலாண்டு விடுமுறை நாட்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அக்டோபர் 7 பள்ளிகள் திறக்கப்படுமா?
ஒருவேளை ஆசிரியர்களின் கோரிக்கை தமிழக அரசு ஏற்றால், காலாண்டு விடுமுறை முடிந்து வரும் அக்டோபர் 7 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.
மேலும் படிக்க - DA Hike | புதிய உத்தரவு! விரைவில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ