கொரோனா தொற்று நமது வாழ்வின் பலவித அம்சங்களையும் மாற்றியுள்ளது. எனினும், பெரும் மாற்றம் ஏற்படாத ஒரு சில விஷயங்களில் தங்க முதலீடும் ஒன்றாகும். உலகளவில் பொருளாதாரத்தில் நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், பாண்டுகள் என இருந்த தங்கள் முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பி வருகின்றனர்.
உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலைதொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 34 ரூபாய் அதிகரித்து ரூ. 4,884-க்கு விற்பனையில் உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 272 அதிகரித்து 39,072-க்கு விற்பனையில் உள்ளது. 18 காரட் தங்கத்திம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 4,001-க்கு விற்கப்படுகின்றது.
மேலும் படிக்க | தங்கம் விலையில் அதிரடி சரிவு: நகை வாங்க படையெடுக்கும் மக்கள்
வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி 68.80 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 68,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்த வரை, பல்வேறு மாநிலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் மாறுபடும். பல்வேறு வரி வகைகளைப் பொறுத்து பல்வேறு இடங்களில் விலைகள் மாறுபடுகின்றன. மேலும், செய்கூலி, சேதாரம் ஆகியவற்றின் அடிப்படையிலும், கடைக்கு கடை விலையில் ஏற்ற இறக்கத்தைக் காண முடிகின்றது
ரஷ்யா உக்ரைன் போரால், பல வித அத்தியாவசிய பொருட்களோடு கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலையும் அதிகமாக உயர்ந்தது. இதன் தாக்கம் அனைத்து நாடுகளைப் போல இந்தியாவிலும் காணப்பட்கின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR