Gold Rate Today: மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி, தங்கம், வெள்ளி விலையில் சரிவு

ஒரு வாரமாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 496 ரூபாய் குறைந்துள்ளது. இதன் அடிப்படையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 17, 2021, 03:54 PM IST
  • தங்கம் வாங்குபவர்களுக்கு ஒரு மிக மகிழ்ச்சியான செய்தி.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 496 ரூபாய் குறைந்துள்ளது.
  • இந்திய அளவில் வியாழக்கிழமை தங்கத்தின் விலை ரூ .48,000-க்கும் கீழே சரிந்தது.
Gold Rate Today: மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி, தங்கம், வெள்ளி விலையில் சரிவு title=

Gold prices Today: தங்கம் வாங்குபவர்களுக்கு ஒரு மிக மகிழ்ச்சியான செய்தி!! தங்கம் வாங்க சரியான நேரம் வந்துள்ளது.  

ஒரு வாரமாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் (Chennai) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 496 ரூபாய் குறைந்துள்ளது. இதன் அடிப்படையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் இன்று ஒரு கிராமுக்கு 62 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,515 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

வெள்ளியின் விலையிலும் (Silver Rate) இன்று வீழ்ச்சியைக் காண முடிகிறது. இன்று காலை நிலவரப்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,300 ரூபாய் குறைந்து 75,100 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி 75.10 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இந்திய அளவில் வியாழக்கிழமை (ஜூன் 17) தங்கத்தின் விலை ரூ .48,000-க்கும் கீழே சரிந்தது. மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX), தங்க ஃப்யூச்சர்ஸ் இன்று காலை 9:10 மணியளவில், 1.46 சதவீதம் சரிந்து, 10 கிராமுக்கு  ரூ .47,799 ஆக விற்பனை ஆனது.  

ALSO READ: Gold Hallmark: 91.6 ஹால்மார்க் என்றால் என்ன; பயன்கள் என்ன

வெள்ளியும் வியாழக்கிழமை குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டது. ஜூலை வெள்ளி ஃப்யூச்சர்ஸ் 1.59 சதவீதம் குறைந்து ஒரு கிலோ ரூ .70,332 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.

இன்று காலை முதல் ஆசிய வர்த்தகத்தில் சர்வதேச தங்க (Gold Rate) மற்றும் வெள்ளி ஸ்பாட் விலைகள் பலவீனமாகவே உள்ளன. பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் எதிர்பார்த்ததை விட விரைவில் வட்டி விகித உயர்வு செய்யப்படும் என கணித்ததைத் தொடர்ந்து டாலர் மற்றும் அமெரிக்க கருவூல மகசூல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த பலவீனம் காணப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக, LBMA கோல்ட் ஸ்பாட் கீழ்நோக்கிய போக்கில் வர்த்தகத்தில் உள்ளது.

இந்தியாவைப் பொறுத்த வரை, பல்வேறு மாநிலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் மாறுபடும். பல்வேறு வரி வகைகளைப் பொறுத்து பல்வேறு இடங்களில் விலைகள் மாறுபடுகின்றன. மேலும், செய்கூலி, சேதாரம் ஆகியவற்றின் அடிப்படையிலும், கடைக்கு கடை விலையில் ஏற்ற இறக்கத்தைக் காண முடிகின்றது.
 
ALSO READ: Hallmark On Gold: தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்: இன்று முதல் அமல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News