Gold Rate: இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம், இல்லத்தரசிகள் ஹேப்பி, விலை என்ன தெரியுமா

Gold Rate Today: சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 68 ரூபாய் குறந்து 4,957 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 20, 2022, 11:15 AM IST
  • தங்கம் என்பது நம் நாட்டு மக்களுடன் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு விஷயமாகும்.
  • தங்கம் விலை திடீர் சரிவு.
  • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
Gold Rate: இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம், இல்லத்தரசிகள் ஹேப்பி, விலை என்ன தெரியுமா title=

தங்கம் என்பது நம் நாட்டு மக்களுடன் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு விஷயமாகும். ஆபரணமாக அணிந்து அழகு பார்ப்பதற்கும், முதலீடாக வாங்கி வைப்பதற்கும், பங்குச் சந்தையில் வாங்கி விற்று பணம் ஈட்டவும், கவுரவத்தின் அடையாளமாகவும், ஒவ்வொருவர் இதை ஒவ்வொரு விதத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அனைத்து வித விசேஷங்களிலும் தங்கத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

சமீப காலங்களில் உலகளாவிய காரணங்களால் தங்கத்தின் விலையில் அதிக ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. உக்ரைன் ரஷ்யா விவகாரம் காரணமாக தங்கம் விலை மிக அதிகமாக உயர்ந்து வந்தது. எனினும், மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, இன்று தங்கத்தின் விலையில், நல்ல வீழ்ச்சியை காண முடிகின்றது.

தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 68 ரூபாய் குறந்து 4,957 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 544 ரூபாய் குறைந்து 39,656 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது. 18 கார்ட தங்கம் ஒரு கிராம் ரூ. 4,061-க்கு விற்பனை ஆகிறது. 

மேலும் படிக்க | Rule of 144: பணத்தை நான்கு மடங்காக பெருக்க இந்த சிறப்பு விதியைப் பின்பற்றவும்

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தை போலவே வெள்ளியும் விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 73.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 73,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.

உலகளாவிய சந்தைகளில் ஸ்திரமற்ற நிலை உள்ளததால், வர்த்தக நிபுணர்கள் தங்கத்தின் முதலீடு குறித்து இன்னும் குழப்பத்திலேயே உள்ளனர். ரஷ்யா உக்ரைன் போரால், பல வித அத்தியாவசிய பொருட்களோடு கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலையும் அதிகமாக உயர்ந்தது. இதன் தாக்கம் அனைத்து நாடுகளைப் போல இந்தியாவிலும் காணப்பட்கின்றது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி சற்று நிவாரணம் அளிக்கும் வகையில் உள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, ஊதிய உயர்வுக்கான சூத்திரத்தில் மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News