ஆரணி ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட குழந்தை உயிரிழப்பு: 40 பேர் பாதிப்பு

ஆரணியில் தனியார் அசைவ ஹோட்டலில் தந்தூரி சிக்கன் பிரியாணி பரோட்டா சாப்பிட்ட குழந்தை பரிதாபமாக இறந்தது. 

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Sep 11, 2021, 05:21 PM IST
ஆரணி ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட குழந்தை உயிரிழப்பு: 40 பேர் பாதிப்பு title=

ஆரணி: ஆரணியில் தனியார் அசைவ ஹோட்டலில் தந்தூரி சிக்கன் பிரியாணி பரோட்டா சாப்பிட்ட குழந்தை பரிதாபமாக இறந்தது. இதன் எதிரொலியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆரணி ஒட்டலில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆரணியை சேர்ந்த அம்ஜத் பாட்ஷா என்பவரின் அசைவ 7ஸ்டார் ஓட்டல் இயங்கி வருகின்றது.

மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆரணி பகுதியை சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்டோர் 7ஸ்டார் ஒட்டலில் இரவு சிக்கன் தந்தூரி பரோட்டா பிரியாணி (Biriyani) உள்ளிட்டவைகளை சாப்பிட்டு உள்ளனர்.

ALSO READ:Zee Hindustan Exclusive: ஜென்மத்துல டியூட்டிக்கே வரமுடியாது: போலீஸை எம்.எல்.ஏ மிரட்டல்

 இதில் 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இந்நிலையில் சிகிச்சை பலினின்றி 10 வயது சிறுமி லோசிகா என்ற குழந்தை இறந்தார். இதன் எதிரொலியாக ஆரணியில் இயங்கி வரும் அனைத்து அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் சேகர், இளங்கோ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

 இதில் அரசு (Government) விதித்த நடைமுறைகளை பின்பற்றி ஓட்டல்களை இயக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட மசாலா பொருட்கள் அல்லாத பிற பொருட்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் ஆகியவை உள்ளிட்ட நடைமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தில்  தற்போது பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

ALSO READ: ஜாதிக்கு எதிராக பெரியார் மட்டுமே போராடினார் என்பதை எதிர்க்கிறோம்: சீமான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News