தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி?

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 8, 2021, 09:30 AM IST
  • தமிழகத்தில் மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கு.
  • ஊரடங்கு பற்றிய விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.
  • தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 26,465 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி? title=

சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. தமிழகத்திலும் தொற்றின் அளவு எழுச்சியைக் கண்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கில் எவற்றிற்கெல்லாம் அனுமதி உண்டு, எவற்றிற்கு இல்லை என இங்கே காணலாம்: 

- மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு.

- அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டுமே அனுமதி.

- வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்லத் தடை.

- உள் அரங்குகள், அரசியல் சமூக கூட்டங்களுக்கு தடை.

- இறப்பு சார்ந்த சடங்குகளில் 20 பேருக்கு மேல் அனுமதி இல்லை.

- 2 வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.

- பூங்காக்கள் விளையாட்டு மைதானங்கள், அருங்காட்சியங்கள் செயல்படாது. 

-  அழகு நிலையங்கள், முடி திருத்தும் கடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

- மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள், தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

- மே 10 முதல் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால், இன்றும் நாளையும் காலை முதல் இரவு 9 வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும். 

- 2 வாரங்களுக்கு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

- தனியார் நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள் அலுவலகத்தில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

- இந்த காலத்தில் பேருந்துகள், ரயில்கள், டாக்சிகள் ஆட்டோக்கள் ஓடாது.

- நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

- மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை

 

- தற்போது செயல்பாட்டில் இருக்கும் கட்டமைப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

- சாலையோர கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

- வங்கிகள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

- அத்தியாவசிப் பணிகளில் இருக்கும் ஊழியர்களுக்கு ஆவணங்களுடன் சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

- தன்னார்வலர்கள் ஆவணங்களுடன் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 26,465 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது, இதுவரையிலான அதிகபட்ச ஒற்றை நாள் தொற்று எண்ணிக்கையாகும். இதனுடன் தமிழகத்தில் மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,23,965 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 197 பேர் இறந்த நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 15,171 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு செய்திக்குறிப்பின் படி, நேற்று 22,381 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,73,439 ஆக உயர்ந்துள்ளது. 1,35,355 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

சென்னையில் மட்டும் நேற்று 6,738 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் சென்னையில் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,77,042 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிகமானோர் இறந்துள்ளனர். இங்கு கொரோனா காரணமாக உயிர் இழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,081 ஆகும். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News