தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்த தடை

தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ பயன்படுத்த தடை விதிப்பு..!

Last Updated : Jul 5, 2020, 01:44 PM IST
தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்த தடை title=

தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ பயன்படுத்த தடை விதிப்பு..!

சாத்தான்குளம் விவகாரத்தில் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தமிழகம் முழுவதும் அந்த அமைப்பினருக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப் படுகின்றன. ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் சமூக இயக்கங்கள் பலவும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீசை காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ பயன்படுத்த தடை விதிக்கப் பட்டிருக்கிறது. முன்னதாக, திருச்சி சரகத்தில், திருச்சி உள்பட 6 மாவட்டங்களில் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தற்காலிக தடை விதிக்கப் படுவதாக திருச்சி சரக DIG ஆனி விஜயா தெரிவித்தார். 

திருச்சி சரக DIG பிறப்பித்த உத்தரவில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரத்தில் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு  தற்காலிக தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் காவல் நிலையத்திற்குள் பிரண்ட்ஸ் ஆப் போலீசை அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவிட்டுள்ளார்.  மேலும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழு சமூக பணிகளில் தொடர தடையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போல், தூத்துக்குடி மாவட்டத்தில் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் காவல் நிலையத்தில் பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் காவல்பணியில் ஈடுபட ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக பணிகளுக்கு மட்டுமே ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயன்படுத்தப்படுவார்கள் என்று எஸ்.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். நெல்லை சரகத்தில் 4 மாவட்டங்களிலும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்தக் கூடாது என DIG பிரவீன்குமார் அபினபு உத்தரவு பிறப்பித்துள்ளார். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது.

READ | மத்திய நிதியமைச்சர் கூறிய ரூ.6,600 கோடி தமிழ்நாட்டிற்குக் கிடைத்ததா?: MKS  

காவல்துறையினர் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்த வேண்டாம் என்று நெல்லை சரக DIG பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டுள்ளார். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கு  அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சாத்தான் குளம் பிரச்னைக்கு பிறகு ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீசார் ஹோம் கார்டுகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளதாக, நெல்லை காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தகவல் வெளியிட்டுள்ளார். வாகன சோதனை மற்றும் பிற காவல் பணியில் ஈடுபடுத்தும் போது பொது மக்களிடம் எல்லை மீறும் ஹோம் கார்ட் மற்றும் பிரன்ஸ்ஆப் போலீசாருக்கு  தடை விதிக்கப் பட்டுள்ளது.

எனினும்,  ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீசார் அமைப்பினரை பணியில் இருந்து விடுவிப்பதற்கான காரணம் அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே என நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தார். மேலும் ஹோம்கார்டு மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீ அமைப்பினருக்கென்று ஓரிரு நாட்களில் தனி பயிற்சி வழங்கபோவதாகவும் அவர் தெரிவித்தார்.

Trending News