சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுக கட்சியில் இணைந்தார் செந்தில் பாலாஜி.
கரூரை சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுகவில் இருந்து பிரிந்த டி.டி.வி.தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் இணைந்தார். அக்கட்சியில் மாநில அமைப்பு செயலாளர் பதவி செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
அதிமுகவில் இருந்து பிரிந்தது 18 எம்.எல்.ஏக்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர். இந்த 18 எம்.எல்.ஏக்களையும் அதிமுக தகுதி நீக்கம் செய்தது. தகுதி நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து, செந்தில்பாலாஜி, அமமுக கட்சியில் இருந்து விலகி இருந்துள்ளார். கடந்த இரண்டு வரமாக அமமுக கட்சியின் தொடர்பில் இருந்து முற்றிலுமாக விலகி கொண்டார். அந்த சமயத்தில் தான் தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசாவுடன், செந்தில்பாலாஜி இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இதனால் தினகரன் தரப்புக்கு பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது.
இதனையடுத்து, அமமுகவை சீண்டிப்பார்ப்பது உயர் அழுத்த மின்சாரத்தை தொட்டுப் பார்ப்பதற்கு சமம். நெல்மணிகளோடு சில களைகளும் சேர்ந்து வளர்ந்து விடுவது வழக்கமானது என மறைமுகமாக செந்தில்பாலாஜியை தாக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் தினகரன்.
இந்நிலையில், தனது தொண்டர்களிடம் திமுகவில் இணைவது குறித்து கருத்து கேட்டறிந்தார். பின்னர் இன்று (டிசம்பர் 14) தனது தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்துக்கு வந்த செந்தில்பாலாஜி, தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
கழக தலைவர் @mkstalin அவர்களை இன்று சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த அமமுக அமைப்பு செயலாளர் - முன்னாள் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்கள், பூங்கொத்து அளித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவரது தலைமையில் ஏராளமானோர் கழக தலைவர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். pic.twitter.com/7IhrLfer6v
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) December 14, 2018