நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது - அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி

நீட் தேர்வை யார் ஆட்சிக்கு வந்தாலும் ரத்து செய்ய முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். அனைத்து பெண்களுக்கும் திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 22, 2023, 08:04 AM IST
  • நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது
  • அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 கொடுக்க வேண்டும்
  • அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வலியுறுத்தல்
நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது - அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி title=

நீட் தேர்வு: அதிமுக vs திமுக

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு அதிமுக ஆட்சியில் இருக்கும்போது அமலுக்கு வந்தது. முதலமைச்சராக ஜெயலலிதா இருக்கும் வரை அவர் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அவருடைய இறப்புக்குப் பிறகு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் இருந்தபோது தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. இதனை திமுக கடுமையாக விமர்சித்த நிலையில் காங்கிரஸ் - திமுக மத்தியில் கூட்டணியாக இருந்தபோது தான் நீட் தேர்வு என்பதே உருவாக்கப்பட்டது என அதிமுக பதிலடி கொடுத்து வருகிறது. 

மேலும் படிக்க | ஆசைக்கு இணங்காத அண்ணி.. அண்ணன் மகனையே கொன்ற கொடூர சித்தப்பா! அதிர்ச்சி பின்னணி!

இதற்கு திமுக கொடுத்திருக்கும் விளக்கத்தில் நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களுக்கு தாங்கள் கொண்டுவந்த நீட் தேர்வில் விலக்கு அளிக்கும் வகையில் சட்டம் இருந்ததாகவும், அந்த சட்டம் பாஜக - அதிமுக கூட்டணியில் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் இரு கட்சிகளின் நிலைப்பாடாகவும் இருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தீவிரமாக நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. ஆனால், யார் ஆட்சிக்கு வந்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி இப்போது தெரிவித்துள்ளார்.  

நீட் தேர்வு ரத்தாகாது: தங்கமணி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பேரூராட்சியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய தங்கமணி, நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரசும்,திமுகவும் தான். யார் வந்தாலும் நீட் தேர்வை நிறுத்த முடியாது, ஏனென்றால் உச்சநீதிமன்ற உத்தரவை யாராலும் மீற முடியாது என தெரிவித்தார்.

திமுக பொய் பிரச்சாரம்

தொடர்ந்து பேசிய அவர், அனைத்து குடும்ப பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்வார்கள். அதனை மக்கள் நம்பக்கூடாது என கேட்டுக் கொண்டார். மேலும், அவர்களிடம் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கி தான் ஆக வேண்டும் என கேள்வி எழுப்புமாறு வலியுறுத்தினார். இரண்டரை வருடங்களாக மக்களை திமுக அரசு ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க | ஒன்றரை லட்சம் பைக் வெறும் ரூ.8,000 தான்..! பலே பைக் திருடர்கள் சிக்கியது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News