இதக்கூட விட்டு வைக்காம வீட்டுக்கு எடுத்துட்டு போனாரு: ராஜேந்திர பாலாஜியை சாடிய எஸ்.எம். நாசர்

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின் போது அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பால் உற்பத்தி நிறுவனமான 'ஆவின்' உற்பத்தி பிரிவில் இருந்து சுமார் 1.50 டன் இனிப்புகளை சொந்த உபயோகத்துக்காக எடுத்துச் சென்றதாக பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டினார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 5, 2021, 11:04 AM IST
  • கே.டி.ராஜேந்திர பாலாஜி, 'ஆவின்' உற்பத்தி பிரிவில் இருந்து சுமார் 1.50 டன் இனிப்புகளை எடுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு.
  • பால் பிரிவில் வேலை நியமனம் தொடர்பாகவும் சில முறைகேடுகள் நடந்திருப்பதாக நாசர் கூறினார்.
  • "இது குறித்து முழுமையான விசரணை நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்”-எஸ்.எம். நாசர் .
இதக்கூட விட்டு வைக்காம வீட்டுக்கு எடுத்துட்டு போனாரு: ராஜேந்திர பாலாஜியை சாடிய எஸ்.எம். நாசர் title=

சேலம்: கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின் போது அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பால் உற்பத்தி நிறுவனமான 'ஆவின்' உற்பத்தி பிரிவில் இருந்து சுமார் 1.50 டன் இனிப்புகளை சொந்த உபயோகத்துக்காக எடுத்துச் சென்றதாக பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டினார்.

தனது கூற்றை ஆதரிக்க போதுமான ஆவணங்கள் தன்னிடம் உள்ளன என்றும் இது குறித்த விசாரணைக்குப் பின்னர் அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுக்கும் என்றும் நாசர் கூறினார்.

"கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நேரத்தில், பாலாஜி 1.50 டன் எடையிலான இனிப்புகளை எடுத்துச் சென்றுள்ளார். அதற்கு போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன" என்று அவர் செய்தியாளர்களிடம் உரையாற்றும்போது கூறினார்.

பாலாஜி இனிப்புகளை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று பின்னர் அவற்றை விநியோகித்ததாக நாசர் குற்றம் சாட்டினார்.

ALSO READ:அனைத்து வழிபாட்டு தலங்கள் திறப்பு- பக்தர்கள் மகிழ்ச்சி

முந்தைய அதிமுக (AIADMK) ஆட்சியின் போது பாலாஜி பால்வளத் துறை அமைச்சராக இருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

"இது குறித்த போதுமான விவரங்கள் எங்களிடம் உள்ளன. அவர் எந்தவிதமான கட்டணமும் செலுத்தாமல் இங்கிருந்து (உற்பத்தி பிரிவு) இனிப்புகளை எடுத்துச் சென்றுள்ளார். முறையான விசாரணை நடத்திய பின்னர் நாங்கள் இது குறித்து நடவடிக்கை எடுப்போம்" என்று அமைச்சர் கூறினார்.

முன்னதாக, தமிழ்நாடு (Tamil Nadu) கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் உற்பத்தி பிரிவில் அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்.

இதற்கிடையில், நாசரின் கூற்று சமூக ஊடகங்களில் எதிரொலித்தது. இது குறித்து பலர் விமர்சித்தனர், பலர் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். அனைத்து விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இலக்காக இருந்தார்.

'ஆவின்' என்பது டி.என்.சி.எம்.பி.எஃப் இன் பல வித தயாரிப்புகளின் பிரபலமான பிராண்ட் பெயர் ஆகும். இந்த கூட்டமைப்பு பொதுவாக 'அவின்'  (Aavin) என்றும் குறிப்பிடப்படுகிறது.

பால் பிரிவில் வேலை நியமனம் தொடர்பாகவும் சில முறைகேடுகள் நடந்திருப்பதாக நாசர் கூறினார்.

புரோக்கர்கள் மற்றும் சில முகவர்கள் மூலம் பணிகளுக்கான பரிந்துரைகள் நடந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

"இது குறித்து முழுமையான விசரணை நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

ALSO READ: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News