வங்க கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது!
தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக கடந்த ஒரு வாரமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், வங்க கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது!
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில்..!
வங்க கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தென்மேற்கு திசையில் இருந்து வட கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 35-50 கி.மீ வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தென் கடலோர மாவட்டங்களில் மணிக்கு சுமார் 35-60 கி.மீ வேகத்தில் கடலில் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.