விளம்பரத்திற்காக பேசுவதை முதலில் நிறுத்துங்கள்: தமிழிசை!!

தமிழக வரலாறு தெரியாமல், பிரிவினை கருத்துக்களை கூறுபவர்கள் இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 

Last Updated : Jun 14, 2019, 11:41 AM IST
விளம்பரத்திற்காக பேசுவதை முதலில் நிறுத்துங்கள்: தமிழிசை!! title=

தமிழக வரலாறு தெரியாமல், பிரிவினை கருத்துக்களை கூறுபவர்கள் இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பா.ரஞ்சித்தின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து, "சமீப காலமாக எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்து கொண்டு, ஒன்று இரண்டு படங்களை எடுத்துவிட்டு தனக்கு எல்லா கருத்துகளையும் கூறுவதற்கு உரிமை இருப்பது போல சிலர் எண்ணி கொண்டு இருக்கிறார்கள். எல்லோரும் வணங்கும், மதிக்கும் தமிழக வரலாற்றை திரித்து நாகரிகமற்ற முறையில் கூறுவது முற்றிலும் தவறு. 

வரலாற்று ஆதாரம் இல்லாமல் மக்களுக்கு பிரிவினை ஏற்படுத்துவதை போல பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் பட்டியலினத்தவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று கூறும் சிலர் அவர்களுக்கு ஆதரவாக இல்லாமல் பிரிவினை கருத்துக்களை கூறி வருகிறார்கள். மக்களை வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி கொண்டு கருத்துகள் மூலமாக பிரித்து பார்க்கிறார்கள்" என்று கூறினார். 

தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, தேர்தல் நேரத்தில் அமைவது தான் கூட்டணியே தவிர தற்போது அதிமுகவும் பாஜகவும் நட்புறவோடு தான் உள்ளோம். அமைச்சர் வேலுமணி, தங்கமணி டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தேன் மூலம் அதிமுக-பாஜக சுமுகமான நட்புறவை கொண்டு உள்ளோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து நேரங்களிலும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.  மத்திய மாநில அரசு நட்புறவோடு இருக்கும் காரணத்தினால் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்கும் என்றார். 

மேலும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருந்த போதிலும் ஸ்டாலின் ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை. மத்தியிலும் திமுக கூட்டணியாக காங்கிரஸுக்கு அதே நிலைமை தான். உள்ளாட்சித் தேர்தலில் திமுக - காங்கிரஸ் நிச்சயம் தல்வியை தான் தழுவும் என்று கூறினார். 

 

Trending News