ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் உயர்வு?

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.100 லிருந்து ரூ.1000 ஆக விரைவில் உயத்தப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Last Updated : Aug 7, 2019, 02:26 PM IST
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் உயர்வு? title=

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.100 லிருந்து ரூ.1000 ஆக விரைவில் உயத்தப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவது அவசியம் எனவும், சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.100-லிருந்து ரூ.1000-மாக அதிகரிக்கப்படும் எனவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்று முதலே தமிழகம் முழுவதும் காவல்துறையினர் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை விரட்டி விரட்டி பிடித்து அபாரதம் வசூலித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது வசூலிக்கப்படும் அபராத தொகையினை மேலும் உயர்த்த திட்டமிட்டுருப்பதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் காவல்துறை அதிகாரிகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் ‘சென்னை மாநகரில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாத அதிகாரிகள் மீது போக்குவரத்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளார்.

Trending News