FAST45 - ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்...

ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

Written by - | Edited by - Mukesh M | Last Updated : Dec 17, 2019, 06:14 AM IST
FAST45 - ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்... title=

ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

  • ஜாமியா வன்முறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்…வழக்கு இன்று விசாரணை… மாணவர்கள் மீது மனித உரிமை மீறல் என மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் புகார்
  • ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் இன்றும் ஆர்ப்பாட்டம்… மாணவர்கள் பெரும் திரளில் தயார்
  • ஜாமியா வன்முறையில் 15 பேர் மீது 2 வழக்குகள் பதிவு… சிசிடிவி கேமரா ஆதாரத்தின்படி மேலும் சிலரை சேர்க்க போலீஸார் தி்ட்டம்
  • ஜாமியா வன்முறையை தொடர்ந்து தில்லி போலீஸில் அதிரடி11 டிசிபிக்கள், ஒரு எடிசிபி டிரான்ஸ்பர்
  • கிளர்ச்சியால் மால்டா மண்டலத்தில் 9 ரயில்கள் ரத்து.... மாற்றுப்பாதையான பராக்கா-ஆசிம்கஞ்ச் வழியாக இயக்கம் 
  • குடியுரிமை சட்டம் குறித்து வதந்தி பரப்பும் 5000 பாக் சோசியல் மீடியா ஹேண்ட்லர்கள்… பாக் பிரபலங்கள் வைரல் செய்வதாக குற்றச்சாட்டு
  • சமாஜ்வாதி எம்பி ஷபீக் உர் ரஹ்மான் பரபரப்பு பேச்சு
  • குடியுரிமை சட்டம் முஸ்லிம்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களுக்கும் கேடு என விமர்சனம்
  • குடியுரிமை சட்டம், விலைவாசி, பெண்கள் மீதான குற்றங்கள் உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து டிசம்பர் 19ஆம் தேதியன்று சமாஜ்வாதி போராட்டம் 
  • சென்னை விமானநிலையத்தில் அதிரடி சுங்கச் சோதனை 28 லட்சம் ரூபாய் மதிப்பு கடத்தல் தங்கம், 8.8 லட்சம் ரூபாய் அன்னியச்செலாவணி பறிமுதல்
  • MLA குல்தீப் சிங் மீதான பாலியல் கொலை வழக்கில் தீஸ் ஹசாரி நீதிமன்றம் இன்று  தீர்ப்பு வெளியிடும் எனத் தகவல்… குல்தீப்சிங் குற்றவாளி என நேற்று அறிவிப்பு
  • நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற அக்‌ஷயின் மறுபரிசீலனை மனு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை.
  • ஜார்க்கண்டின் சஹாப்கஞ்சில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் ஐந்தாம் கட்ட தேர்தலில் தீவிர வாக்கு சேகரிப்பு 
  •  
  • நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குடியுரிமை சட்ட எதிர்ப்பு சர்ச்சை மத்தியில் தென்கொரியாவுக்கு காங் மாஜி தலைவர் ராகுல்காந்தி பயணம்...
  • தில்லி-சஹரான்பூர் பாசஞ்சர் ரயிலில் அபாயச் சங்கிலியை இழுத்து இளைஞர்கள் ரகளை… ரயிலை நிறுத்தாத ஆத்திரத்தில் தாக்கப்பட்ட டிரைவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி 
  • மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசுகள் ஓராண்டு நிறைவு… கோலாகல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
  • தில்லி வன்முறையாளர்கள் பற்றி திடுக்கிடும் தகவல்… அரசு வாகனங்களை குறிப்பிட்டு தாக்க ஆலோசனை தந்த விடியோ ரிலீஸ்
  • குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் மாணவர்களுக்கு அமீத் ஷா வேண்டுகோள்… எதிர்க்கட்சியினர் சூழ்ச்சிக்கு பலிகடா ஆகவேண்டாமென அறிவுறுத்தல்… மதரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு நிவாரணம் தரும் முயற்சியென விளக்கம்
  • தில்லி போலீஸ் கமிஷனருடன் பாஜக குழு சந்திப்பு… வன்முறையை தூண்டுவதாக ஆம் ஆத்மி மீது புகார்
  • இன்று தொடங்கும் குளிர்கால பேரவை தொடருக்கு மத்தியப்பிரதேச அரசு ஆயத்தம்.. முதல்வர் இல்லத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முக்கிய ஆலோசனை… பாஜக எதிர்ப்பை சமாளிக்க வியூகம் தயாரிப்பு
  • கமல்நாத் அரசு ஓராண்டு நிறைவு… முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் அமைச்சரவை கூட்டத்தில் வளர்ச்சி திட்ட அறிக்கை தாக்கல்… 
  • உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற பாடுபடுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு முதல்வர் பாகெல் உற்சாக அழைப்பு.. மயில் தேசம், மயில் பேரவை என முழக்கம்
  • தேர்தல்  பிரசாரத்தில் அமைச்சர் காவாசி லக்மா மீண்டும் சர்ச்சை பேச்சு… பாஜக தரும் மது,பணத்தை வாங்கிக்கொண்டு காங்கிரசுக்கு வாக்களிக்க அட்வைஸ் 
  • போபால் சிறார் இல்லத்தில் 8 பேர் மாயமான விவகாரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் இம்ரதி தேவி நடவடிக்கை.. அதிகாரிகளுடன் அதிரடி சோதனை
  • பிகாரில் இடதுசாரிகள் பந்த்துக்கு அழைப்பு… டிசம்பர் 21ல் மகா கூட்டணி பந்த்… 19ல் இடதுசாரிகள் பந்த்
  • குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பிகாரில் தீவிர எதிர்ப்பு… பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள்… பாட்னா பல்கலை மாணவர்கள் கண்டன பேரணி
  • ராஜஸ்தான் அரசு ஓராண்டு நிறைவு… எதிர்ப்புகளை மீறி வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றியதாக முதல்வர் பெருமிதம்
  • ராஜஸ்தான் அரசு ஓராண்டு நிறைவை முன்னிட்டு தாராள அறிவிப்பு… சிலிகோசிஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் 1500 ரூபாய் கருணைக்கொடை
  • புற்றுநோயாளிகளுக்கு முதல்வர் அசோக் கெல்லாட் சலுகை… மகவான் மகாவீர் கேன்சர் மருத்துவமனையில் கதிரியக்க சிகிச்சை மையம் திறப்பு
  • ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர் மீது தடியடி… இந்திய தேசிய மாணவர்கள் ஒன்றிய தலைவர் அபிமன்யூ தலைமையில் ஏராளமானவர்கள் இரங்கல் ஊர்வலம்
  • கோடா மாவட்டத்தில் ஊழல் ஒழிப்பு துறையினர் அதிரடி வேட்டை… லஞ்சம் வாங்கிய கமலாகாந்த் வைஷ்ணவ் கைது
  • சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்... ராஜஸ்தானில் இளைஞர் அராஜகம்… பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி
  • ஹனுமன்காரில் மதுபோதையில் இளம்பெண்ணும் இரு இளைஞர்களும் ரகளை… கண்மூடித்தனமாக காரை ஓட்டி டிராக்டரில் மோதல்… ஷாக் விடியோ வைரல்
  • பிகானேரில் நடுரோட்டில் ஸ்லீப்பர் கோச் பஸ்ஸில் திடீர் தீ ஓட்டுநர் சாமர்த்தியத்தால் பயணிகளின் உயிர் தப்பினர்...
  • புதிய ராணுவத்தளபதியாகிறார் லெப்டினன்ட் ஜெனரல் எம்எஸ் நார்வனே… டிசம்பர் 31ல் ராணுவ தளபதி பிபின் ராவத் ஓய்வு
  • குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோவையில் ஆர்ப்பாட்டம்… சம்பவத்துக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
  • கன்னியாகுமரியில் குழித்துறையில் கூட்டத்தில் பாய்ந்த பஸ்… 25 பேர் படுகாயம்
  • காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா இந்தியா கேட் முன்பாக தர்ணா... பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஜாமியா வன்முறை பிரச்சினை தொடர்பாக போராட்டம்...
  • தில்லியில் பிரியங்கா வாத்ரா 2 மணி நேர போராட்டம்... போராட்டத்துக்கு பின் பேசிய அவர்  மோடி அரசை விமர்சித்தார். இது ஜனநாயகம்,  சர்வாதிகாரம் அல்ல .. மாணவர்களே இந்த ஜனநாயகத்தின் அடிப்படை என்றார் ...
  • ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசியை இரண்டாவது ஜின்னா என்று பாஜக செய்தித் தொடர்பாளர் வருணனை... ஜின்னாவாக ஓவைசி  மாற விரும்புகிறார் என நையாண்டி...
  • மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பரபரப்பு ஊர்வலம்... குடியுரிமை சட்டம் மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சர்களுடன் நடைப்பயணம் 
  • மம்தா ஊர்வலத்தால் மேற்கு வங்க ஆளுநர் ஓ.பி.தங்கர் அதிருப்தி. இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி இருக்குமாறு மம்தாவுக்கு ட்வீட் செய்து அறிவுறுத்தல்
  • ஜாமியா வன்முறை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ட்வீட்... வன்முறை மற்றும் பிரிவினையின் தாயானது மோடி அரசு என்றும் நாட்டை வெறுப்பு என்ற குருட்டுப் பள்ளத்திற்குள் தள்ளிவிட்டது என கருத்து... 
  • மேற்கு வங்க ஆளுநரின் அதிருப்தி குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி பதில்... அமைதியை நிலைநாட்டுவதில் மாநில அரசு கவனம் என விளக்கம்
  • மெட்ராஸ் ஐ.ஐ.டி மாணவர்கள் சென்னையில் போராட்டம்... குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பதாகைகளுடன் மாணவர்கள் அணிவகுத்து ஊர்வலம்...
  • உத்தரபிரதேச மாநிலம் மவுவில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டம் .. காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த  வாகனங்களுக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைப்பு... பேருந்துகள் அடித்து சேதம் 

Trending News